கோவிட் காலகட்டத்தில் வேலையில்லாததால் இழப்பீடு கோரிய ஒரு தரப்பினர்: ஜேர்மன் நீதிமன்றத்தின் முடிவு

COVID-19 Germany
By Balamanuvelan Aug 04, 2023 09:30 AM GMT
Report

கோவிட் காலகட்டத்தில் தங்களுக்கு வேலையில்லாததால் இழப்பீடு வழங்கவேண்டும் என கோரி ஜேர்மன் இசைக்கலைஞர்கள் நீதிமன்றம் சென்றனர்.

இழப்பீடு கோரிய இசைக்கலைஞர்

கோவிட் காலகட்டத்தில் இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் தங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரி, இசைக்கலைஞர்கள் சார்பில் Martin Kilger (47) என்னும் ஜேர்மன் இசைக்கலைஞர் நீதிமன்றம் சென்றிருந்தார்.

2020ஆம் ஆண்டு, மார்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், தனது ஐந்து இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும், அதற்காக 8,300 யூரோக்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கோரியிருந்தார் Martin.

கோவிட் காலகட்டத்தில் வேலையில்லாததால் இழப்பீடு கோரிய ஒரு தரப்பினர்: ஜேர்மன் நீதிமன்றத்தின் முடிவு | German Court Reject Lockdown Compensation Musician

Image: Tobias Schwarz/AFP/Getty Images 

Martin, தெற்கு பவேரியாவில் இசைக்குழு, இசை மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

நீதிமன்றத்தின் முடிவு

வழக்கை விசாரித்த நிதிமன்றம், கோவிட் காலகட்டத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் வேலையிழந்த இசைக்கலைஞர்களுக்கு இழப்பீடு வழங்கத் தேவையில்லை என தீர்ப்பளித்துள்ளது.

கோவிட் காலகட்டத்தில் பொதுமுடக்கம் அவசியமான ஒன்றாக இருந்தது என்று கூறியுள்ள நீதிமன்றம், ஜேர்மன் பெடரல் அரசும், மாகாண அரசுகளும் பொதுமுடக்கத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கியதை சுட்டிக்காட்டியுள்ளது.

கோவிட் காலகட்டத்தில் வேலையில்லாததால் இழப்பீடு கோரிய ஒரு தரப்பினர்: ஜேர்மன் நீதிமன்றத்தின் முடிவு | German Court Reject Lockdown Compensation Musician

Image: Karl-Josef Hildenbrand/dpa/picture alliance 

சிறுதொழில் செய்வோருக்கு பெடரல் அரசு சார்பில் 9,000 யூரோக்களும், கூடுதலாக சுய தொழில் செய்வோருக்கு பவேரியா மாகாண அரசு சார்பில் 5,000 முதல் 50,000 யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இசைக்கலைஞர்களுக்கென தனியாக இழப்பிடு வழங்கத் தேவையில்லை என நீதிமன்றம் கூறிவிட்டது.

அரசு தரப்பு வாதத்தின்போது, கொரோனா வைரஸ் எலோரையும்தான் பாதித்தது, சிலரை குறைவாகவும், சிலரை அதிகமாகவும் அது பாதித்தது என அரசு தரப்பு சட்டத்தரணியான Malte Weitner கூறியது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US