குழந்தையை காரில் வைத்து எரித்து, தானும் தற்கொலை செய்து கொண்ட ஜேர்மன் தந்தை: அதிர்ச்சியில் உறைந்த பிரித்தானிய தாய்
ஜேர்மனியைச் சேர்ந்த நபர் தனது 3 வயது மகனை காருடன் எரித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர்த்துகீசியத்தில், Phoebe Arnold எனும் பெண் தனது 3 வயது மகன் Tasso-வையும், தனது முன்னாள் கணவரான, ஜெர்மனியைச் சேர்ந்த டிசைனர் Clemens Weisshaar (40) என்பவரையும் சில நாட்களாக காணவில்லை என பொலிஸில் புகார் அளித்திருந்தார்.
அவர் அளித்த புகாரில், தனது முன்னாள் கணவர் கிளெமென்ஸ் சில மாதங்களாக எங்களுக்கு பிறந்த மகனை பார்க்கவில்லை என்பதால், அக்டோபர் மாத இறுதியில் என்னிடமிருந்து டொஸோவை வெளியே அழைத்துச் சென்றார்.
Image: Instagram
மகனுடன் சிறிது நேரம் செலவழித்த பிறகு நவம்பர் 1-ஆம் திகதி திரும்பி வந்து மகனை ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்னும் அவர்கள் வரவில்லை, அவர்களை அணுகவும் முடியவில்லை, என கூறி அவர்கள் காணாமல் போனதாக புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், லிஸ்பனுக்கு தெற்கே 80 மைல் தொலைவில் உள்ள சான்டா மார்கரிடா டா செர்ராவிற்கு அருகிலுள்ள மலைகளில் ஞாயிற்றுக்கிழமை காலை, அங்கிருக்கும் வேட்டைக்காரர்கள் காணமால் போன இருவரையும் கொடூரமாக இறந்து கிடந்த நிலையில் கண்டுபிடித்தனர்.
Image: Instagram
3 வயது குழந்தை Tasso காருடன் சேர்த்து எரித்து கொல்லப்பட்டுள்ளார். அந்தக்கொடூரமான காட்சிக்கு அருகில், கிளெமென்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு குண்டடி காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், இது ஒரு கொலை-தற்கொலையாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவர்கள் இறந்து எவ்வளவு காலம் ஆனது என்பது தெரியவில்லை. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Photo: Getty Images
இருவரது உடலும் பிரேதப் பரிசோதனைக்கு அபிப்பிவைக்கப்பட்டுள்ளன. முடிவு வரும்போது மரணத்தின் சரியான நேரத்தையும், காரணத்தையும் தீர்மானிக்க முடியும் என பொலிஸாரால் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவைச் சேர்ந்த Arnold மற்றும் ஜேர்மனியை சேர்ந்த Weisshaar இருவரும், லண்டனில் சந்தித்து, 2016-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர், பின்னர் திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது.
ஆனால் அவர்கள் எங்கு, எப்படி திருமணம் செய்தனர் என்பது இதுவரை தெளிவாகவில்லை. அவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தை தான் Tasso.
Santa Margarida da Serra, Portugal - Photo: Mirror
ஒன்றாக வாழ்ந்துவந்த இந்த ஜோடி, கடந்த ஜூலை மாதம் பிரிந்ததாக Arnold கூறினார். அவர்கள் பிரிந்த பிறகு, Arnold தனது மகனை அழைத்துக்கொண்டு லிஸ்பனுக்கு குடிபெயர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம், Weisshaar மிகப் பிரபலமான டிசைனர் என கூறப்படுகிறது. லண்டனில் டிசைன் படித்த அவர், 2002-ல் முனிச் மற்றும் ஸ்டாக்ஹோமில் தனது வணிகப் பங்காளியுடன் சேர்ந்து Kram/Weisshaar நிறுவனத்தை நிறுவி நடத்திவந்துள்ளார்.