ஜேர்மன் தேர்தல் முடிவுகள்: இணைந்தும் ஒன்று சேராத கிழக்கும் மேற்கும்
கிழக்கு மேற்கு என இரண்டாகப் பிரிந்திருந்த ஜேர்மனி, 1990ஆம் ஆண்டு ஒன்றாக இணைந்ததென்னவோ உண்மைதான்.
ஆனாலும், மக்கள் மனதில் அந்த பிரிவினை இன்னமும் இருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன எனலாம்.
ஜேர்மன் தேர்தல் முடிவுகள்
இந்த உண்மையை, இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படம் மூலம் எளிதாக விளக்கிவிடலாம்.
ஆம், கிழக்கு ஜேர்மனி முழுவதுமே வெற்றி பெற்றுள்ளது, புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான AfD கட்சிதான்.
மேற்கு ஜேர்மனி முழுவதும், ஓரிரண்டு இடங்கள் தவிர்த்து வெற்றி பெற்றுள்ளது CDU கட்சி.
குறிப்பாக, AfD கட்சி, கிழக்கு ஜேர்மனியில் CDU கட்சிவசம் இருந்த சுமார் ஒரு மில்லியன் வாக்காளர்களை தன் வசப்படுத்திக்கொண்டிருக்கிறது.
காரணம் என்ன?
இப்படி கிழக்கு ஜேர்மனியில் வாழும் மக்கள் AfD கட்சியை ஆதரிக்க என்ன காரணம்?
முக்கிய கட்சிகள், கடந்த பல ஆண்டுகளாக கிழக்கு ஜேர்மனியை புறக்கணித்துவிட்டன.
சொல்லப்போனால், ஒரே ஜேர்மனியாக இருந்தும், மேற்கு ஜேர்மனியை விட கிழக்கு ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதியம் குறைவு.
மேற்கு ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதியம் 3,655 யூரோக்கள். அதுவே, கிழக்கு ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதியம் 3,013 யூரோக்கள்தான்.
அத்துடன், பெர்லின் சுவர் உடைக்கப்பட்ட பிறகும், கிழக்கு ஜேர்மனியின் பொருளாதாரம் மேற்குக்கு இணையாக வளரவே இல்லை.
இந்நிலையில், இளைஞர்கள் பேராதரவுடன், கிழக்கு ஜேர்மனியில் AfD கட்சி வேகமாக வளர்ந்துவருகிறது.
ஆக, தற்போது ஆட்சிக்கு வந்துள்ள கட்சிகள் கிழக்கு ஜேர்மனியில் வாழும் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க தவறுமானால், அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பு கூட AfD கட்சிக்கு இருக்கிறது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |