ஜேர்மனியில் தகர்க்கப்பட்ட மிக உயர்ந்த பாலம்: முடிவுக்கு வந்த 55 ஆண்டுகால பயணம்
ஜேர்மனியில் சுமார் 55 ஆண்டுகள் பழமை வாய்ந்த Rinsdorf பாலம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.
Wilnsdorf அருகிலுள்ள North Rhine-Westphalia என்று பகுதியில் உள்ள Rinsdorf என்று அழைக்கப்படும் பாலம் வெடிவைத்து தகர்க்கப்ட்டுள்ளது.
இந்த பாலம் சுமார் 70 மீட்டர்(230 அடி) உயரமும், 500 மீட்டர்(1640) நீளமும் கொண்டது. 55 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாலம் பழுதடைந்ததை தொடர்ந்து பாலம் தகர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
WATCH: A 72-meter-tall bridge was destroyed in Rinsdorf, Germany, in a controlled demolition. It was the tallest bridge ever to be blasted by demolition experts in the country pic.twitter.com/0fW1d9i9y1
— Reuters Asia (@ReutersAsia) February 9, 2022
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சுமார் 120 கிலோ வெடிமருந்துகள் கொண்டு தகர்த்தெறியப்பட்டுள்ளது.
மேலும் Michael Schneider தலைமையிலான இந்த குழு தகர்த்துள்ள இந்த பாலம் ஜேர்மனியில் இதுவரை தகர்க்கப்பட்ட பாலத்திலேயே இதுவே மிக உயர்ந்த பாலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து Michael Schneider பேசுகையில் பாலம் பாதுகாப்பான முறையில் தகர்க்கப்பட்டதாகவும், பாலத்தின் இடிந்த பாகங்கள் அதற்காக அமைக்கப்பட்ட தளத்தில் விழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இதற்கு அருகில் கட்டப்பட்டுள்ள மாற்று பாலத்திற்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் தகர்ப்பு பணி நடந்துள்ளதாக தெரிவித்தார். இந்த பாலம் இடிக்கப்படுவதை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் அந்தப்பகுதியில் கூடி வேடிக்கை பார்த்து வியப்படைந்தனர்.