புடின் குறித்து ஜேர்மன் முன்னாள் சேன்ஸலர் விடுத்துள்ள எச்சரிக்கை
புடினுடைய வார்த்தைகளை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது என எச்சரித்துள்ளார் முன்னாள் ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல்.
புடினுடைய வார்த்தைகளை சீரியஸாக எடுத்துக்கொள்வது அரசியல் ஞானத்தின் அடையாளம் என்று அவர் கூறியுள்ளார்.
புடினுடைய வார்த்தைகளை சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டும் என முன்னாள் ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் போர் துவங்குவதற்கு இரண்டு மாதங்கள் முன் பதவியிலிருந்து விலகினார் மெர்க்கல்.
ஜூன் மாதம் அவர் புடின் குறித்து தெரிவித்த ஒரு கருத்து குறித்து கேட்கும்போது அவர் இவ்விதம் கூறினார்.
சமீபத்தில் புடின் அணு ஆயுத தாக்குதல் தொடர்பில் ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார். மாஸ்கோவிடம் அழிவுக்கருவிகள் பல உள்ளன, அவை நேட்டோ நாடுகளிடம் உள்ளதைவிட நவீனமானவை என்று கூறியிருந்தார் அவர்.
Copyright Hendrik Schmidt/dpa via AP
ரஷ்யாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுமானால், ரஷ்யாவையும் அதன் மக்களையும் பாதுகாப்பதற்காக நிச்சயம் அணு ஆயுதம் பயன்படுத்துவோம், இது வெறும் மிரட்டல் அல்ல என்று கூறியிருந்தார் புடின்.
அந்த வார்த்தைகளை நினைவுகூரும் மெர்க்கல், புடினுடைய வார்த்தைகளை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவற்றை சீரியஸாக எடுத்துக்கொள்வது பலவீனத்தின் அறிகுறி அல்ல, அது அரசியல் ஞானத்தின் அடையாளம் என்று கூறியுள்ளார்.
?? Germany's former chancellor, Angela Merkel, warned in Berlin that Vladimir Putin's words should be taken seriously. She added that not dismissing words as a bluff was "proof of political intelligence."
— euronews (@euronews) September 28, 2022