ஜூலை பிறந்தாயிற்று... இந்த மாதத்தில் ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களை பாதிக்கும் மாற்றங்கள் என்னென்ன?

Germany
By Balamanuvelan Jul 02, 2021 10:15 AM GMT
Report

ஜூலை மாதம் பிறந்துள்ள நிலையில், ஜேர்மனியில் பல்வேறு மாற்றங்கள் அமுலுக்கு வர உள்ளன. அவற்றில், ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களை பாதிக்கும் மாற்றங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

1. வீட்டிலிருந்தபடி வேலை பார்ப்பது கட்டாயம் என்னும் விதியில் மாற்றம் ஜனவரியில், அலுவலகங்களிலும், பொதுப்போக்குவரத்தின்போதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, மக்கள் வீட்டிலிருந்தபடி வேலை பார்ப்பது கட்டாயம் என அரசு அறிவித்தது. இந்த விதி ஜூலை 1உடன் முடிவுக்கு வருகிறது.

இனி வீட்டிலிருந்து வேலை பார்ப்பது கட்டாயமல்ல, ஆனாகும், உங்கள் முதலாளி உங்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதிப்பது அவரது விருப்பம்! அப்படி நீங்கள் அலுவலகத்துக்கு வருவதென்றால், உங்களுக்கு பணி வழங்குபவர் அவ்வப்போது கொரோனா சோதனைகள், சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் முதலிய விதிகளை பின்பற்றக் கோரவேண்டும்.

2. பயண விதிகளில் மாற்றம் அபாய நாடுகளாக கருதப்படாத ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்க இனி தடையேதும் இல்லை. அதற்கு பதில் கவனத்துடன் பயணிக்க மட்டும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். அதே நேரத்தில், அபாய நாடுகள் பட்டியலில் உள்ள நாடுகளுக்குச் செல்வதை தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதுடன், அதிக அபாய மற்றும் திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவல் உள்ள நாடுகளுக்கு செல்ல எச்சரிக்கை தொடர்கிறது.

3. ஐரோப்பிய ஒன்றிய கொரோனா டிஜிட்டல் சான்றிதழ் அமுலுக்கு வருகிறது ஜூலை 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய கொரோனா டிஜிட்டல் சான்றிதழ் அமுலுக்கு வருகிறது. மொபைல் போனில் கூட டிஸ்ப்ளே செய்யும் விதத்தில் அறிமுகமாகும் இந்த சான்றிதழ், முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் Schengen பகுதியிலுள்ள நாடுகளுக்கு தனிமைப்படுத்தல் போன்ற கட்டுப்பாடுகள் தேவையின்றி பயணிப்பதை எளிமையாக்கும் விதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

4. ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு ஜூலை 1 முதல் ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்க உள்ளது. முன்பு ஒரு மணி நேரத்துக்கு 9.50 யூரோக்களாக இருந்த குறைந்தபட்ச ஊதியம், 10 சென்ட்கள் அதிகரித்து 9.60 ஆக உயர உள்ளது. அது படிப்படியாக அதிகரித்து 2022 இறுதியில் 10.45 யூரோக்களாக உயர உள்ளது.

5. கிழக்கு ஜேர்மனியில் ஓய்வூதியம் உயர்வு கோடையில் ஓய்வூதியம் உயர்வது ஜேர்மனியில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம், அதுவும் வழக்கமாக ஜூலை 1இல்தான் இந்த ஓய்வூதிய உயர்வு அறிவிக்கப்படும்.

ஆனால், மேற்கு ஜேர்மனியின் கொரோனா சூழல் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால், இம்முறை ஓய்வூதியம் உயராது என பெடரல் அரசு அறிவித்துவிட்டது. அதே நேரத்தில், கிழக்கு ஜேர்மனியில் ஜூலை 1 முதல் ஓய்வூதியம் 0.72 சதவிகிதம் உயர உள்ளது.

6. ஒருமுறை உபயோகித்துவிட்டு தூக்கி எறியும் 10 பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை கடந்த ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்டபடி, ஒருமுறை உபயோகித்துவிட்டு தூக்கி எறியும் 10 பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 3 முதல் தடை விதைக்கப்பட உள்ளது.

7. ஜேர்மனியில் 3G நெட்வொர்க்குகள் முடிவுக்கு வருகின்றன

8. ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்துக்கும் ஜூலை 1 முதல் VAT வரி விதிக்கப்பட உள்ளது.

9. இனி கூரியரில் வரும் பொருட்களை வீட்டின் அழைப்பு மணியை அடித்து ஆள் வந்த பிறகு கையில் ஒப்படைக்கும் முறை கிடையாது. (சில விதிவிலகுகளுடன்)

10. ஜூலை மாதத்திலிருந்து ஒன்லைன் சூதாட்டம் சட்டப்படி அனுமதிக்கப்பட உள்ளது. 11. Real பல்பொருள் அங்காடிகளுக்கு குட்பை ஜேர்மனியின் பிரபல பல்பொருள் அங்காடிகளில் ஒன்றான Real பல்பொருள் அங்காடிகள் மூடப்பட உள்ளன.

மேலதிக விவரங்களுக்கு...https://www.iamexpat.de/expat-info/german-expat-news/july-2021-11-changes-affecting-expats-germany

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US