எதிர்பார்ப்பை மீறி அதிகரித்த ஜேர்மன் ஏற்றுமதி
German exports rise more than expected in September: ஜேர்மன் ஏற்றுமதி, எதிர்பார்ப்பை விட செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில், ஜேர்மன் ஏற்றுமதி 0.5 சதவிகிதம் அதிகரிக்கும் என ராய்ச்சர்ஸ் பத்திரிகை கணித்திருந்தது.
எதிர்பார்ப்பை மீறி...
ஆனால், ராய்ச்சர்ஸ் பத்திரிகையின் கணிப்பை மீறி, ஜேர்மன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

ஜேர்மன் ஏற்றுமதி, செப்டம்பர் மாதத்தில் கடந்த மாதத்தைவிட 2 சதவிகிதம் அதிகரித்து 141.1 பில்லியன் யூரோக்களை எட்டியுள்ளதாக, இன்று வெளியாகியுள்ள ஜேர்மன் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செய்யப்பட்ட ஏற்றுமதி 3.5 சதவிகிதம் அதிகரித்ததே இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் என Investing.com India என்னும் இணையதளம் தெரிவிக்கிறது.