பிரெக்சிட்டுக்குப் பிறகு குறைந்த ஜேர்மன் ஏற்றுமதி: ஆய்வு முடிவுகள்
பிரெக்சிட்டுக்குப் பிறகு, ஜேர்மனியிலிருந்து பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு குறைந்துள்ளதாக ஜேர்மன் ஆய்வமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
பிரெக்சிட்டுக்குப் பிறகு குறைந்த ஜேர்மன் ஏற்றுமதி
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய விடயம், பிரெக்சிட் என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், பிரெக்சிட்டுக்குப் பின், ஜேர்மனியிலிருந்து பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு 7 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஜேர்மன் ஆய்வமைப்பான German Economic Institute (IW) தெரிவித்துள்ளது.
அதே காலகட்டத்தில், ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பொருட்களின் அளவு 41 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முன் ஜேர்மனி பிரித்தானியாவுக்கிடையிலான வர்த்தகம் வலுவாக இருந்துள்ளது.
2006க்கும் 2015க்கும் இடையிலான காலகட்டத்தில் பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் அளவு சுமார் 38 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அதே காலகட்டத்தில், ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பொருட்களின் அளவு 20 சதவிகிதம்தான் அதிகரித்துள்ளது.
ஆக, பிரெக்சிட் இரண்டு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியில் சேதத்தைத்தான் ஏற்படுத்தியுள்ளது என்று கூறும் ஆய்வாளர்கள், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒற்றைச் சந்தையில் இணைவதை ஜேர்மனி விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |