ஜேர்மனி இணைய பேச்சுவார்த்தைகள் நடத்திய முக்கிய அரசியல்வாதி மரணம்
கிழக்கு மேற்கு என பிரிந்திருந்த ஜேர்மனி ஒன்றாக இணைய பேச்சுவார்த்தைகள் நடத்தியவரும், நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த ஐரோப்பாவை மீட்க கடும் முயற்சிகள் மேற்கொண்டவருமான பிரபல அரசியல்வாதி ஒருவர் மரணமடைந்துள்ளார்.
ஜேர்மனி இணைய பேச்சுவார்த்தைகள் நடத்திய அரசியல்வாதி
ஏஞ்சலா மெர்க்கலின் அமைச்சரவையில் 2009ஆம் ஆண்டு நிதி அமைச்சராக பொறுப்பேற்றவர் Wolfgang Schaeuble. சரியாக அந்த நேரத்தில் ஐரோப்பா ஒரு பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள, அவரது கடும் முயற்சி நிதி நெருகடியிலிருந்து விடுபட ஐரோப்பாவுக்கே பெரும் உதவியாக இருந்தது.
இந்த Schaeuble, கிழக்கு மேற்கு என பிரிந்திருந்த ஜேர்மனி ஒன்றாக இணைய முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தியவர் ஆவார்.
ஆனால், ஜேர்மனி இணைந்ததும், மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் 1990ஆம் ஆண்டு Schaeubleயை துப்பாக்கியால் சுட, அவரது உடல் இடுப்புக்குக் கீழே செயலிழந்தது. அதற்குப் பிந்தைய தனது வாழ்நாள் முழுவதையும் அவர் சக்கர நாற்காலியில்தான் செலவிட்டார்.
ஜேர்மனியின் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர்
ஜேர்மனியின் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினரான Schaeuble, தனது 81ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை அவர் தனது வீட்டில் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எட்டு ஆண்டுகள் நிதி அமைச்சராக பணியாற்றிய Schaeuble, பின்னர் நாடாளுமன்ற சபாநாயகரானார்.
அவரது மறைவுக்கு ஜேர்மன் இந்நாள் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், முன்னாள் சேன்சலரான ஏஞ்சலா மெர்க்கல் முதல் உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |