ஜேர்மனி ஈரான் போரில் பங்கேற்கவில்லை: ஆனால்... ஜேர்மன் நிதி அமைச்சர் கூறும் விடயம்
ஜேர்மனி ஈரான் போரில் பங்கேற்கவில்லை. ஆனால், போரின் தாக்கத்தை ஜேர்மனி அனுபவித்துவருகிறது என்கிறார் ஜேர்மன் நிதி அமைச்சர்.
ஜேர்மனி ஈரான் போரில் பங்கேற்கவில்லை
ஜேர்மனி ஈரான் போரில் பங்கேற்கவில்லை என்றாலும், ஜேர்மன் பொருளாதாரத்தின் மீது ஈரான் போர் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் ஜேர்மன் நிதி அமைச்சரான Lars Klingbeil.

இந்தப் போர், ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சியையும் பாதித்துள்ளது என்பதை தெளிவாகக் காணமுடிகிறது என்கிறார் அவர்.
மத்திய கிழக்கு முழுவதிலும் போர் நடைபெறுவது சரியல்ல என நான் நினைக்கிறேன் என்று கூறிய Lars Klingbeil, தூதரக வாயிலாக எடுக்கப்படும் நடவடிக்கைகளே நீடிக்கக்கூடிய, வெற்றிகரமான அமைதித் தீர்வை ஏற்படுத்தமுடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |