ஜேர்மனியில் வாழும் அகதிக்குழந்தைகளுக்காக விளையாட்டு அமைப்பொன்று துவக்கியுள்ள திட்டம்
விளையாட்டு என்பது பல விதங்களில் இளைஞர்களுக்கு நன்மை பயக்கும் விடயம் என்றால் மிகையாகாது.
மேலை நாடுகள் சிலவற்றில், இளைஞர்கள், போதை, கேங் மோதல்கள் போன்ற தவறான பாதைகளுக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, அவர்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்தும் அமைப்புகள் உண்டு.
அதேபோல, தாங்கள் விளையாட்டுகளில் கவனம் செலுத்தியதால், இளமையில் வழிதப்பிப்போகாமல் நல்ல எதிர்காலத்தை அடைய முடிந்ததாக கூறும் பலர் இப்போதும் உண்டு.
Image: Thomas Klein/DW
அவ்வழியில், ஜேர்மனியில் வாழும் அகதிக் குழந்தைகளுக்கும், விளையாட்டு அமைப்பொன்று சில நன்மைகளை செய்துவருகின்றது.
விளையாட்டு அமைப்பொன்று செய்துவரும் நல்ல விடயம்
மேற்கு ஜேர்மனியிலுள்ள Hertha Bonn என்பது, ஒரு கால்பந்து கிளப் ஆகும். அந்த கிளப், ஜேர்மனியில் வாழும் அகதிக் குழந்தைகள் சமுதாயத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு வசதியாக திட்டம் ஒன்றைத் துவக்கியுள்ளது.
அகதிக் குழந்தைகளுக்கு கால்பந்து விளையாட அந்த அமைப்பு கற்றுக்கொடுக்கும் நிலையில், விளையாட்டின் மூலமாகவே, வேறு பல பயனுள்ள விடயங்களையும் கற்றுக்கொடுக்கிறது அந்த அமைப்பு.
Image: Thomas Klein/DW
நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அந்த திட்டத்தின் பெயர், ’Football Connects’ என்பதாகும்.
வன்முறைக்குத் தப்பியோடிவரும்போது, வலிமையானவர்களே முன்னேறமுடியும் என்னும் ஒரு எண்ணம் பிள்ளைகள் மனதில் உருவாகிவிடும் வாய்ப்புள்ளது.
அதனால், பிள்ளகள், முரட்டுத்தனமாக, சுயநலமாக மாறிவிடவாய்ப்பு அதிகம். ஆனால், பலர் இணைந்து விளையாடும் குழு விளையாட்டுகள் மூலம், பிள்ளைகளுக்கு மீண்டும் ஒருவரோடு ஒருவர் இணைந்து, விட்டுக்கொடுத்து வாழும் எண்ணம் விதைக்கப்படுகிறது.
Image: Thomas Klein/DW
விடயம் என்னவென்றால், இப்படி விளையாட்டில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, உதவி விளையாடப் பழகுவது, அவர்கள் ஜேர்மன் சமுதாயத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கும் உதவியாக இருக்கும்.
ஆக, இந்த Hertha Bonn அமைப்பின் ’Football Connects’ திட்டம், பிள்ளைகளுக்கு சமுதாயத்துடன் ஒன்றிணைந்து வாழ பழகுவதற்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |