ஜேர்மனியில் முதல் முறையாக பிரித்தானியாவில் பரவும் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு! அங்கு எப்படி வந்தது?
லண்டனில் இருந்து விமானம் மூலம் பிராங்க்ஃபர்ட் நகரத்துக்கு வந்த ஒரு பெண்ணுக்கு பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
"இது ஜெர்மனியில் அறியப்பட்ட முதல் வழக்கு" என்று ஜேர்மனியின் பேடன்-வூர்ட்டம்பேர்க் மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த பெண் டிசம்பர் 20 அன்று லண்டன் ஹீத்ரோவிலிருந்து பிராங்க்ஃபர்ட் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
விமான நிலையத்திற்கு வந்தபோது கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்த அவர், தனது உறவினர்களால் அழைத்துச்செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.
ஒரு நாள் கழித்து, அவர் லேசான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கினார், இரண்டாவது பரிசோதனையும் நேர்மறையானதாக மாறியது.
அவரது swab test மாதிரி மேலும் பகுப்பாய்வுக்காக ஒரு சிறப்பு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவருக்கு பிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்காவில் பரவிவரும் 'வைரஸ் மாறுபாடு B.1.1.7' இருப்பது கண்டறியப்பட்டது.
ஜேர்மன் அரசு கடந்த செவ்வாயன்று பிரித்தானியாவிலிருந்து வருவதற்கான தடையை ஜனவரி 6-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.