குழந்தை பெற்றுக்கொள்வதற்கெதிராக ஜேர்மன் அரசு வெளியிட்டதாகக் கூறும் போஸ்டரால் பரபரப்பு
குழந்தை பெற்றுக்கொள்வதற்கெதிராக ஜேர்மன் அரசு வெளியிட்ட போஸ்டர் என கருதப்படும் போஸ்டர் ஒன்று வேகமாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகிறது.
மக்கள் கோபம்
என்ன, இப்படி குழந்தை பெற்றுக்கொள்வதற்கு எதிராக ஒரு அரசே பிரச்சாரம் செய்கிறதா? என கொந்தளித்தார்கள் மக்கள். பல மொழிகளில், குறிப்பாக பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் அந்த போஸ்டர் ஆயிரக்கணக்கன முறைகள் பகிரப்பட்டுவருகிறது.
அது என்ன போஸ்டர்?
எதிர்காலமா அல்லது பருவநிலைக் கொலையா என அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது. அதன் பொருள் என்னவென்றால், குழந்தை பெற்றுக்கொள்வதால், பருவநிலை மாற்றம் பாதிக்கப்படுகிறதாம்.
குடும்ப வாழ்க்கை மீதும், மனித உயிர் மீதும் வெட்கத்துக்குரிய வகையிலான தாக்குதல் இது என தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஒருவர்.
En Allemagne, un publicité dans le métro avec un enfant et un nouveau né.
— D. Gagnon ?☠️ (@sushis911) February 16, 2022
Il y est inscrit : "Le futur ou des meurtriers du climat?" pic.twitter.com/yknSv9ejjX
உண்மை என்ன?
உண்மையில், அது ஜேர்மன் அரசு வெளியிட்ட பிரச்சார போஸ்டர் அல்ல. அது, 2020இல் தயாரிக்கப்பட்ட 'No Children for the Sake of the Climate.' என்னும் ஆவணப்படத்திற்கான போஸ்டர்.
அந்த ஆவணப்படத்தின் அந்த எபிசோடில், இரண்டு பிரித்தானிய தம்பதிகள், பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டைக் குறைப்பதற்காக, தங்கள் பங்குக்கு, குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர்க்க முடிவு செய்வதாகக் காட்டப்படுகிறது. இப்படி செய்வதன் பெயர் birth striking, அதாவது, பருவநிலை மாற்றத்துக்கெதிரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக, குழந்தை பிறப்பை தவிர்ப்பது.
ஆக, சமூக ஊடகங்களில் பரவிவரும் அந்த போஸ்டர் இந்த ஆவணப்படத்திற்கானதுதானே தவிர, ஜேர்மன் அரசு குழந்தை பெற்றுக்கொள்வதற்கெதிராக வெளியிட்ட போஸ்டர் அல்ல!
சொல்லப்போனால், பிறப்பு வீதம் குறைந்துகொண்டே வருவதையடுத்து, பல நாடுகள் தங்கள் குடிமக்களை குழந்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்திவருகின்றன என்பதுதான் உண்மை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |