இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்... ஜேர்மனியில் தீவிர வலதுசாரிகள் ஆதிக்கம்
ஜேர்மனி பொதுத்தேர்தலில் இரண்டாம் உலகப் போருக்குக்குப் பின்னர் முதல் முறையாக தீவிர வலதுசாரிகள் தங்கள் பலத்தை வலுப்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கூட்டணிக்கு வாய்ப்பில்லை
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், சுமார் 19.5 சதவிகித வாக்குகளை அவர்கள் கைப்பற்றக் கூடும் என்றும் தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, பொதுத்தேர்தலில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
கடந்த 2013ல் உருவான AfD கட்சி புலம்பெயர் கொள்கைகளுக்கு எதிராகவும், ரஷ்ய ஆதரவு நிலை என தங்கள் பரப்புரைகளை முன்னெடுத்து வந்துள்ளது. ஆனால், ஜேர்மனியில் எந்த அரசியல் கட்சியும் AfD கட்சியுடன் கூட்டணிக்கு முன்வர வாய்ப்பில்லை என்பதால், அவர்கள் அரசாங்கத்தில் இணையவும் வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட AfD கட்சிக்கு திடீரென்று உலகின் பெரும் கோடீஸ்வரரான எலோன் மஸ்க் மற்றும் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் ஆகியோரின் ஆதரவு கிடைத்தது.
வெளிவந்துள்ள கருத்துக்கணிப்புகள் தங்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள AfD கட்சியின் தலைவர் Alice Weidel அடுத்த முறை ஜேர்மனியில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றார்.
ஒரு சிறந்த நாள்
தற்போதும் தாங்கள் கூட்டணிக்கு தயார் என்றும் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்காக காத்திருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். வெளிவரும் தகவலின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் 23 சதவிகித இடங்களைப் பெறும் என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஜேர்மனிக்கு ஒரு சிறந்த நாள் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.
மட்டுமின்றி, இத்தாலிய துணைப் பிரதமர் மேட்டியோ சால்வினி மற்றும் டச்சு இஸ்லாமிய எதிர்ப்பு தேசியவாதி கீர்ட் வைல்டர்ஸ் ஆகியோர் AfD கட்சிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |