ரஷ்யா ஊடுருவும் நேரத்தில் உக்ரைன் நாட்டிலிருந்த ஜேர்மன் உளவுத்துறைத் தலைவர்: தப்பியது எப்படி? வெளியாகியுள்ள பரபரப்புத் தகவல்கள்
உக்ரைனை ரஷ்யா ஊடுருவும்போது ஜேர்மன் உளவுத்துறைத் தலைவர் உக்ரைனிலிருந்ததாகவும், அவரை சிறப்புப் படைகள் இரகசியமாக அங்கிருந்து வெளிக்கொணர்ந்ததாகவும், பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சில அவசர தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக ஜேர்மன் உளவுத்துறைத் தலைவரான Bruno Kahl உக்ரைன் சென்றிருந்த நிலையில், ரஷ்ய ஊடுருவல் காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட, கஷ்டப்பட்டு இரண்டு நாட்கள் இரகசியமாக பயணித்து உக்ரைனிலிருந்து வெளியேறியுள்ளார் அவர்.
திடீரென விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் நில மார்க்கமாக பயணித்துள்ளார்.
அந்தப் பயணம் கடினமானதாகவும், நீண்ட ஒன்றாகவும் இருந்ததாக தெரிவித்துள்ள ஜேர்மன் உளவுத்துறை, ஏராளமான அகதிகள் அதே பாதையில் பயணிக்க, அவர்களுடன் பயணித்த உளவுத்துறைத் தலைவரான Bruno Kahl ஐரோப்பிய ஒன்றியத்தைச் சென்றடைந்ததாகவும், அவர் இன்று தலைநகர் பெர்லினை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜேர்மன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.