சமையல் மேஜையில் எட்டு ஆண்களுக்கு எலக்ட்ரிசியன் செய்த அறுவை சிகிச்சை... ஒருவர் மரணம்: ஜேர்மனியில் ஒரு பயங்கர வழக்கு
ஜேர்மனியில் எலக்ட்ரிசியன் ஒருவர் எட்டு பேருக்கு ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தனது கடனை அடைப்பதற்காக, தன்னை ஒரு மருத்துவர் என காட்டிக்கொண்டு, ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்வதாக விளம்பரப்படுத்தியுள்ளார், Markt Schwaben என்ற நகரைச் சேர்ந்த அந்த நபர்.
அவரை நம்பி வந்த எட்டு பேருக்கு தனது சமையலறை மேஜையில் வைத்து அவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒருவர் இறந்துபோக, அவரது உடல் மூன்று வாரங்களுக்குப் பின், ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, அந்த எலக்ட்ரிசியன், தான் அறுவை சிகிச்சை செய்த நபருக்கு பிரச்சினை ஏற்பட்டபோது, உதவி கோராமல், அவரை சாகவிட்டதற்காக அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அந்த 66 வயது எலக்ட்ரிசியன் முனிச் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, தன்னை இணையம் வாயிலாக தொடர்புகொண்ட அந்த நபர்கள் கேட்டுக்கொண்டதின்பேரில்தான், தான் அறுவை சிகிச்சை செய்ததாக கூறியுள்ளார்.