ஜேர்மன் இளைஞருக்கு சிறை தண்டனை விதித்த துபாய் நீதிமன்றம்! நடந்தது என்ன?

Germany Jailed United Arab Emirates German Man Rolex Watch
By Ragavan Sep 19, 2021 09:12 PM GMT
Report

ஐக்கிய அமீரகத்தில் விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை திருடிய குற்றத்திற்காக ஜேர்மன் இளைஞருக்கு துபாய் குற்றவியல் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட 37 வயது ஜேர்மன் இளைஞர், சுமார் 38,000 திர்ஹம் மதிப்புள்ள இரண்டு ரோலக்ஸ் கடிகாரங்களைத் திருடியது நிரூபணம் ஆனதைத் தொடர்ந்து அவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிஸினஸ் பே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் அந்த கடிகாரங்கள் இருந்துள்ளன. அதனைப் பார்த்த அந்த நபர், கார் கதவை எளிமையாக திறக்க, அந்த காரின் லைட்டிங் வயர்களை தான் வைத்திருந்த ஒரு எலெக்ட்ரானிக் கருவியுடன் இணைத்தார்.

இதனால் வாகனத்தின் பிரேக் மற்றும் பின்புற விளக்குகள் பழுதடைந்தன. காரின் உரிமையாளர், தனது காருக்கு திரும்பி வந்து பார்த்தபோது, ​​அதன் மின் அமைப்பு வேலை செய்யாததைக் கவனித்தார்.

அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், பிறகு வீட்டிற்கு வந்ததும், காருக்குள் வாங்கி வைக்கப்பட்டிருந்த புதிய ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் காணாமல் போனதை கண்டுபிடித்து, உடனடியாக துபாய் பொலிஸில் நடந்த சம்பவத்தை தெரிவித்து புகார் அளித்தார். இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் நடந்தது.

பிறகு, குறித்த ஜேர்மன் இளைஞரை பொலிஸார் சந்தேகநபராக கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு, அந்த நபர் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும், அவர் அந்த கடிகாரத்தை ஒரு அல்ஜீரிய நபருக்கு 28,000 திர்ஹம்களுக்கு விற்றதாகக் கூறினார்.

ஜேர்மன் இளைஞருக்கு சிறை தண்டனை விதித்த துபாய் நீதிமன்றம்! நடந்தது என்ன? | German Man Jailed Uae Steal Rolex Watches Dh38000 Image Credit: Gulf News

இந்த நிலையில், இந்த வழக்கில் துபாய் குற்றவியல் நீதிமன்றம் அந்த நபரை குற்றவாளி என்று அறிவித்தது, ஆனால் வழக்கறிஞர்கள் தண்டனையை மேல்முறையீடு செய்தனர்.

அந்த நபரின் வழக்கறிஞர் முகமது அல் நஜார் கூறுகையில், "வாக்குமூலம் கட்டாயப்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் அவர் காரைத் திறக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சாதனம் மற்றும் கைக்கடிகாரங்களை விற்றதாகக் கூறி அவர் எடுத்த பணம் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை" என்று வாதத்தை முன்வைத்தார்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் வழக்கறிஞரின் வாதத்தை நிராகரித்து, அந்த நபருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதித்து பின்னர் நாடு கடத்தப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு 38,000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டது. 

மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US