ஜேர்மனியில் மேயருக்கு கத்திக்குத்து: உயிருக்கு போராட்டம்! அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி
ஜேர்மனி மேற்கு பகுதியை சேர்ந்த மேயருக்கு கத்திக்குத்து சம்பவம் நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேயருக்கு கத்திக்குத்து
ஜேர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள ஹெர்டெக் நகரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் ஐரிஸ் ஸ்டால்சர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஜனநாயக கட்சியின் உறுப்பினரான 57 வயது ஐரிஸ் ஸ்டால்சர் அவரது வீட்டிற்கு அருகே கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
பொலிஸார் வழங்கிய தகவலின் படி, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ஐரிஸ் ஸ்டால்சர் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் மேயராக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் விசாரணை
மேயருக்கு கத்திக்குத்து நடந்ததை தொடர்ந்து தாக்குதல் குறித்து தீவிர விசாரணையை நடந்து வருகிறது.
இதற்கிடையில் இந்த கத்திக்குத்து சம்பவம் அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |