ஜேர்மன் மேயர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம்: மகளே தாயை தாக்கியதாக வெளியான தகவலால் அதிர்ச்சி
ஜேர்மன் நகர மேயர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட விடயம் ஜேர்மனியில் பரபரப்பை உருவாக்கிய நிலையில், அவரை அவரது மகளே தாக்கியதாக வெளியான தகவல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட மேயர்
ஜேர்மனியிலுள்ள Herdecke என்னும் நகரில் சமீபத்தில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஐரிஸ் (Iris Stalzer, 57) என்னும் பெண்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் தனது வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார் ஐரிஸ். உடனடியாக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல்
இந்நிலையில், தன்னைக் கத்தியால் குத்தியது தனது வளர்ப்பு மகள்தான் என மேயர் ஐரிஸ் கூறியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஒரு வீட்டில் இரண்டு சிறுபிள்ளைகளுக்கிடையே நடந்த வாக்குவாதத்தின் விளைவாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிசார், தாக்கப்பட்டவர் ஒரு அரசியல்வாதி என்பதால் விடயம் அதிக கவனம் ஈர்த்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, இது கொலைமுயற்சி வழக்காக எடுத்துக்கொள்ளப்படப்போவதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், ஐரிஸை தாக்கிய அவரது 17 வயது மகள்தான், பிறகு ஐரிஸால் தத்தெடுக்கப்பட்ட மகனான 15 வயது சிறுவனுடன் இணைந்து அவசர உதவியை அழைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
வீட்டில் அந்த 15 வயது சிறுவன் தனியாக இருப்பதால் ஐரிஸை தாக்கிய அவரது மகளை பொலிசார் விடுவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஐரிஸ், சென்ற மாதம், அதாவது செப்டம்பர் மாதம் 28ஆம் திகதிதான் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார்.
அடுத்த மாதம், அதாவது, நவம்பர் மாதம் 4ஆம் திகதி அவர் மேயராக பதவியேற்க இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |