மக்கள்தொகையில் சீனாவை முந்திய இந்தியாவை இனரீதியாக அவமதித்த ஜேர்மன் ஊடகம்: பலத்த எதிர்ப்பு
மக்கள்தொகையில் சீனாவை இந்தியா முந்தியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, ஜேர்மன் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள கேலிச்சித்திரம் ஒன்றிற்கு பலத்த எதிர்ப்பு உருவாகியுள்ளது.
ஜேர்மன் ஊடகம் வெளியிட்ட கேலிச்சித்திரம்
ஜேர்மனியின் பிரபல பத்திரிகையாகிய 'Der Spiegel', மக்கள்தொகையில் சீனாவை இந்தியா முந்தியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
??#Germany this is outrageously racist. @derspiegel caricaturing India in this manner has no resemblance to reality. Purpose is to show #India down and suck up to #China.
— Kanchan Gupta ?? (@KanchanGupta) April 23, 2023
This is as bad if not worse than the racist cartoon in @nytimes lampooning India’s successful Mars mission. pic.twitter.com/z9MxcPQC7u
அதில், பழங்காலத்து ரயில் ஒன்றில் மக்கள் கூட்டமாக இந்திய தேசியக் கொடியைப் பிடித்துக்கொண்டு பயணிப்பது போலவும், அதன் அருகே தொழில்நுட்பத்தில் முன்னேறிய சீன ரயில் ஒன்று பின்தங்கி பயணிப்பதுபோலவும் ஒரு காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.
கடும் எதிர்ப்பு
இந்த கேலிச்சித்திரத்துக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இந்தியாவின் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சக மூத்த ஆலோசகரான Kanchan Gupta இதுகுறித்து டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், இது மிக பயங்கரமான இனவெறுப்புச் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவை அவமதித்து சீனாவுக்கு ஆதரவைக் காட்டுவதற்காக இப்படி ஒரு கேலிச்சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ள அவர், இந்தியா செவ்வாய்க்கு வெற்றிகரமாக மங்கள்யான் விண்கலத்தை அனுப்பியதைக் கண்டு வெயிற்றெரிச்சலில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட இனவெறுப்பு கேலிச்சித்திரம் போன்றே இதுவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
In German, the name of influential magazine Der Spiegel means The Mirror.
— Baijayant Jay Panda (@PandaJay) April 23, 2023
But going by this derogatory, racist cartoon, it should change its name to Rassistischer Troll.
& considering Germany’s difficult history involving racism & the holocaust, Germans everywhere should force… pic.twitter.com/Jma8D1fKuR
மற்றொரு ட்விட்டர் பயனர், ஜேர்மனி உக்ரைன் போருக்குப் பின் பல தொழில்துறைகளை இழந்துவிட்டது. இந்த குளிர்காலத்தை சமாளிக்க எரிவாயுவுக்காக ஜேர்மனி அரசு அரை ட்ரில்லியன் அளவுக்கு பணம் செலவழித்துள்ளது.
ஆகவே, இப்படித்தான் தங்கள் வயிற்றெரிச்சலை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். பாருங்கள், உங்களை சீக்கிரம் இந்திய பொருளாதாரம் முந்திவிடும் என்று கூறியுள்ளார்.
இந்திய மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான திரு ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளவரே, இந்தியாவை நீங்கள் அவமதிக்க முயன்றாலும், இந்தியாவுடன் போட்டிபோடுவது புத்திசாலித்தனம் அல்ல, இன்னும் சில ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் ஜேர்மனியை மிஞ்சிவிடும் என்று கூறியுள்ளார்.
Dear Cartoonist at @derspiegel
— Rajeev Chandrasekhar ?? (@Rajeev_GoI) April 23, 2023
Notwithstanding ur attmpt at mocking India, its not smart to bet against India under PM @narendramodi ji ??In a few years Indias economy will be bigger than germany's ??#NewIndia pic.twitter.com/Evzooqfc2J