ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் உக்ரைனுக்கு திடீர் வருகை: ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி...
ஜேர்மனியின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Boris Pistorius, உக்ரைனுக்கு திடீர் வருகை புரிந்துள்ளார்.
முன்னறிவிப்பின்றி உக்ரைன் வருகை
ஜேர்மனியின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சரான Boris Pistorius, எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வருகைபுரிந்துள்ளார். அவர் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சரான Oleksii Reznikov ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.
BREAKING: The «first» Leopard 2 has arrived in Kyiv ?
— Oleksii Reznikov (@oleksiireznikov) February 7, 2023
There will be more of them.✊
Thank you to @Bundeskanzler my colleague Boris Pistorius and the German people.
The tank coalition is marching... to victory! pic.twitter.com/4VY2YaovBi
அவர், ஜேர்மன் தயாரிப்பான Leopard 2 tank ஒன்றின் மாதிரியை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரிடம் வழங்குவது போன்ற ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படத்தில், முதல் Leopard 2 tank கீவ்வை வந்தடைந்தது, மேலும் பல வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, ஜேர்மனியின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சராக Boris Pistoriusஇன் முதல் அரசுமுறைப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Image: Kay Nietfeld/dpa/picture alliance
Image: Kay Nietfeld/dpa/picture alliance