உக்ரைனுக்கு சர்ப்ரைஸாக வந்த ஜேர்மன் அமைச்சர்: ஆனால் சேன்ஸலரைக் காணோம்
உக்ரைனுக்கு வருமாறு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஜேர்மன் சேன்ஸலருக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்துக்கொண்டிருக்க, சர்ப்ரைஸாக உக்ரைனுக்கு வந்து இறங்கியவர் ஜேர்மன் சேன்ஸலர் அல்ல, ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர்.
ஆம், ஜேர்மன் வெளியுறவுத்தலைவரான Annalena Baerbock உக்ரைன் தலைநகர் Kyivக்கு அருகிலுள்ள Bucha நகருக்கு இன்று வருகை புரிந்துள்ளார்.
திடீரென சர்ப்ரைஸாக உக்ரைன் வந்திறங்கிய Annalena, உள்ளூர் மக்களை சந்தித்துள்ளார். அவர் உக்ரைன் வெளியுறவு அமைச்சரான Dmytro Kulebaவை இன்று மாலை சந்தித்துப் பேச இருக்கிறார்.
அத்துடன், Kyivஇல் மீண்டும் ஜேர்மன் தூதரகத்தையும் அவர் திறந்துவைக்க இருக்கிறார்.
உக்ரைன் போர் துவங்கியபின் உக்ரைனுக்கு வருகை தரும் முதல் கேபினட் அமைச்சர் Annalena என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ஜேர்மன் சேன்ஸலரான Olaf Scholzஐ உக்ரைனுக்கு வருமாறு கடந்த வாரம் கூட அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் Olaf உக்ரைனுக்குச் செல்லும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
In Gedenken an die Opfer russischer Verbrechen in #Butcha zündet Außenministerin Baerbock eine Kerze in der Kirche der Stadt an #ukraine pic.twitter.com/VCNuJZ6gmN
— Katrin Eigendorf (@KEigendorf) May 10, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி யோகரட்ணம் தில்லைநாதர் மூர்த்தி
Ipoh, Malaysia, London, United Kingdom, சென்னை, India, கொழும்பு
09 May, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022