ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஜேர்மன் அமைச்சர்கள் கடும் எச்சரிக்கை
German ministers threatened tough penalties for looters and rioters: ஜேர்மனியில் கலவரங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் பொதுச்சொத்துக்களை சூறையாடிவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரான்சைத் தொடர்ந்து ஜேர்மனியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ளார்கள்.
வன்முறையும் சூறையாடலும்...
குறிப்பாக, ஃப்ராங்பர்ட் நகரில் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது, தலையை மறைக்கும் வகையில் உடை அணிந்த சிலர் கடைகளை சூறையாடியுள்ளார்கள்.

17 கடைகள் சூறையாடப்பட்ட நிலையில், அந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் 54 பேரைக் கைது செய்துள்ளார்கள்.
இந்நிலையில், ஃப்ராங்பர்ட் அமைந்துள்ள Hesse மாகாணத்தின் உள்துறை அமைச்சரான ரோமன் (Roman Poseck), ஃப்ராங்பர்ட்டில் நிகழ்ந்த விடயங்களைக் கண்டு தான் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன், இதை அப்படியே விடமுடியாது என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், ஜேர்மனியின் ஃபெடரல் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் (Alexander Dobrindt), சேதம் ஏற்படுத்தியவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்றும், சேதங்களுக்கு அவர்கள் கணக்குக் கொடுக்கவேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படலாம் என தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ள நிலையில், சர்ச்சைக்குரிய ஒரு கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.
அதாவது, பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்கள் புலம்பெயர்ந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் வலது மற்றும் இடதுசாரி தீவிர அமைப்பினருடன் இணைந்து செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் அமைச்சர் அலெக்சாண்டர்.