ஜேர்மன் மொடல் வெளியிட்டு சர்ச்சையான புகைப்படம்! விமர்சனங்களுக்கு கொடுத்த பதிலடி..
ஜேர்மன் மொடலும் நடிகையுமான ஈவ்லின் ஷர்மா (Evelyn Sharma) தனது இரண்டு மாத குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில் பதிவேற்றம் செய்துள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
ஈவ்லின் ஷர்மா தனது இரண்டு மாத குழந்தைக்குப் பாலூட்டும் புகைப்படங்களை தனது Instagram பக்கத்தில் கடந்த வாரம் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படத்திற்கு எதிராக பலரும் ஈவ்லின் ஷர்மா மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்நிலையில் தன் மீது வைக்கபட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஈவ்லின் ஷர்மா.
ஈவ்லின் ஷர்மா அமெரிக்க படங்களில் நடித்து வந்ததைத் தொடர்ந்து பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் அயன் முகர்ஜி இயக்கத்தில் வெளியான “யே ஜவானி ஹை திவானி“ படத்தின் மூலம் இந்திய ரசிகர்களிடையே பிரபலமானார்.
தற்போது பஞ்சாபியில் வசித்துவரும் இவர் அவுஸ்திரேலிய இந்தியரான துஷான் பிண்டியை (Tushaan Bhindi) திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தனது 2 மாதக் குழந்தையான அவா பிண்டிக்கு (Ava Bhindi) பாலூட்டும் புகைப்படங்களை கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் நடிகை ஈவ்லின்.
இது பார்ப்பதற்கு ஆபாசமாக இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்தனர். அதற்கு 'தாய்மார்கள் தனியாக இல்லை' என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று தான் விரும்புவதாக விளக்கம் அளித்திருந்தார் ஈவ்லின்.
இந்நிலையில் தற்போது பேட்டியொன்றில் “ஒரேநேரத்தில் இந்தப் படங்கள் பாதிப்பையும் வலியையும் காட்டுகின்றன. நான் அதை அழகாக காண்கிறேன். தாய்ப்பால் மிகவும் இயற்கையான ஆரோக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். உண்மையில் பெண்களுக்கு முதலில் மார்பகங்கள் இருப்பது இதற்குத்தான்“ என தெரிவித்துள்ளார்.
நடிகை ஈவ்லின் ஷர்மாவின் இந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.