ஆஸ்காருக்கு தேர்வாகியுள்ள ஜெர்மன் திரைப்படம்: உலகப்போரின் பயங்கரத்தை விவரிக்கும் காட்சிகள்
ஆஸ்கார் விருதுக்குத் தேர்வான “All Quiet on the Western Front” என்ற ஜெர்மன் திரைப்படம் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் நடந்த பயங்கரமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆஸ்காரில் தேர்வு
ஜெர்மன் இயக்குனர் இயக்கிய ”ஆல் குயட் ஆன் தி வெஸ்டன் பிரண்ட்” என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதில் ஒன்பது பிரிவில் தேர்வாகியுள்ளது. அதில் சிறந்த திரைப்படம் என்ற பிரிவிலும் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
@independent
17 வயது ஜெர்மன் ராணுவ சிறுவன் மற்றும் அவனது சக தோழர்கள் போரில் எவ்வளவு இன்னல்களைச் சந்தித்தார்கள் என்பதனை பற்றி விவரிக்கக் கூறிய படமாகவுள்ளது. மேலும் போர் மனித வாழ்வில் உளவியல் ரீதியாக எவ்வளவு அழுத்தங்களைத் தருகிறது என்பதனை இப்படம் விவரிப்பதாக அப்படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.
போரைத் தொடங்கிய நாடே உருவாக்கிய படம்
இது அமெரிக்க இயக்குநர்கள் உருவாக்கும் போர் படம் போல இருக்காது என்றும் அமெரிக்கர்கள் எப்போதும் அவர்களது சனாதன பார்வையிலேயே போர் சார்ந்த படங்களை இயக்கி வருகிறார்கள் என இப்படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.
மேலும் “இந்த படம் போரை யார் ஆரம்பித்து வைத்தார்களோ, கடைசியில் யார் தோற்றும் போனார்களோ அதே நாட்டை சேர்ந்த ஒரு ராணுவ வீரனின் பார்வையில் உருவாக்கப்பட்ட படம்” என அப்படத்தின் இயக்குநர் எட்வர்ட் பெர்கர் கூறியுள்ளார்.
@youtube
இந்த படம் 1929 ஆம் ஆண்டு வெளியான எரிக் மரியா ரிமார்கு என்ற எழுத்தாளர் எழுதிய ”ஆல் குயட் ஆன் தி வெஸ்டன் பிரண்ட்” புகழ்பெற்ற நாவலின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படம் வரும் மார்ச் 12 ஆம் திகதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. ஆஸ்காரில் ஒன்பது பிரிவுகளில் தேர்வாகியிருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.