படகு வீட்டுக்குள் இறந்து கிடந்த பெண் பிரபலம்: கடுமையாக தாக்கப்பட்டதாக தகவல்
ஜேர்மனியின் பிரபல நாவலாசிரியர் ஒருவர் தனது படகு வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் முரட்டுத்தனமாக தாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
படகு வீட்டுக்குள் இறந்து கிடந்த பெண்
செவ்வாய்க்கிழமை காலை, ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில், Elbe நதியில் நிறுத்தப்பட்டிருந்த படகு வீடு ஒன்றில் அலெக்சாண்ட்ரா (Alexandra Fröhlich, 58) என்னும் பெண் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அலெக்சாண்ட்ரா, ஜேர்மனியின் புகழ் பெற்ற நாவலாசிரியர் ஆவார். அலெக்சாண்ட்ரா முரட்டுத்தனமாக தாக்கப்பட்டு, பின் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அலெக்சாண்ட்ரா Elbe நதியில் தனது படகு வீட்டில் வாழ்ந்துவந்த நிலையில், அவரைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட ஆயுதம் நதியில் வீசப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்பதால், நீச்சல் வீரர்கள் நதியில் ஆதாரங்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |