10 நோயாளிகளைக் கொன்ற செவிலியர்: நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கலாம் என அச்சம்
ஜேர்மனியில் செவிலியர் ஒருவர் 10 நோயாளிகளைக் கொன்றதாக சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கலாம் என அச்சம் உருவாகியுள்ளது.
செவிலியர் ஒருவர் ஒருவர் 10 நோயாளிகளைக் கொன்றதாக கடந்த நவம்பர் மாதம் சிறையிலடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சுமார் 139 நோயாளிகள் வழக்குகளுடன் அந்த செவிலியருக்கு தொடர்பிருக்கலாம் என அச்சம் உருவாகியுள்ளது.
செவிலியரின் கொடூர செயல்
தனக்கு வேலைப்பளு அதிகமாக இருந்ததால், தன் கண்காணிப்பின் கீழிருக்கும், மிகவும் வயதான நோயாளிகளைக் கொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார் செவிலியர் ஒருவர்.

Aachen நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவந்த Ulrich S என்னும் அந்த செவிலியர், இரவு ஷிஃப்டின்போது நிறைய நோயாளிகளைக் கவனிக்கவேண்டியிருந்ததால், அவர்களுடைய உடலில், குளூக்கோஸ் ஏற்றும் குழாய் மூலம் மயக்க மருந்துகள் அல்லது வலி நிவாரணிகளை எக்கச்சக்கமாக ஏற்றியுள்ளார்.
அதில், பல நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள். சிலர் உயிர் தப்பிவிட்டார்கள்.
அவ்வகையில், 10 நோயாளிகளைக் கொன்றதாகவும், 27 நோயாளிகளைக் கொலை செய்ய முயன்றதாகவும் கடந்த நவம்பரில் சிறையில் அடைக்கப்பட்டார் Ulrich.
இந்நிலையில், மேலும் 121 நோயாளிகள் வழக்குகளுடன் Ulrichக்கு தொடர்பிருக்கலாம் என தற்போது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அது தொடர்பில், சுமார் 40 நோயாளிகளின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
விடயம் என்னவென்றால், இந்த Ulrich, Aachen நகரிலுள்ள மருத்துவமனையில் பணியாற்றும் முன், Cologne நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றிலும் பணியாற்றிவந்துள்ளார்.
ஆக. அந்த மருத்துவமனையிலும் 18 நோயாளிகள் உயிரிழந்த வழக்குகளிலும் Ulrichக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கும் அதிகாரிகள் அந்த வழக்குகள் தொடர்பிலும் விசாரணை துவக்கியுள்ளார்கள்.
ஆக, சுமார் 139 நோயாளிகள் வழக்கில் Ulrich சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
ஜேர்மனியைப் பொருத்தவரை, குற்றவாளிகள் 15 ஆண்டுகள் சிறையில் செலவிட்டபின், தங்களுக்கு ஜாமீன் வழங்க, அல்லது முன்கூட்டியே தங்களை விடுவிக்கக் கோரலாம்.
ஆனால், Ulrich, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அவர் ஏற்கனவே சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குகளும் சேர்ந்து, அவர் 15 ஆண்டுகள் ஆனாலும் ஜாமீனில் வெளிவரமுடியாத அல்லது முன்கூட்டியே விடுவிக்கப்பட முடியாத நிலையை உருவாக்கலாம் என கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |