ஜேர்மனியில் கடுமையான விதியை அமுல்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம்! வெளியான முக்கிய தகவல்
ஜேர்மனியில் அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான விதிகளை அமல்படுத்த வேண்டுமா என்பது குறித்த பாராளுமன்றத்தின் கீழ் சபையில் விவாதம் நடத்தப்பட்டது.
முன்னதாக, ஜேர்மனியில் இன்று புதிதாக 1,64,000 பேருக்கு தொற்று உறுதியானது, இது நாட்டில் பதிவான அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று கொரோனாவால் 166 பேர் உயிரிழந்த நிலையில் ஜேர்மனியில் வைரஸால் இறந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,17,126 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜேர்மனியில் பெரியவர்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும் அல்லது 50 வயதுக்கு மேறப்ட்டவர்கள் மட்டும் தடுப்பூசி கட்டாயமாக்குவது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆலோசனை வழங்கலாமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாம்.
இதனிடையே, சாதாரண மருத்துவமனை வார்டுகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது என்று ஜேர்மன் மருத்துவமனை கூட்டமைப்பின் தலைவர் ஜெரால்ட் கேஸ் கூறினார்.
ஜேர்மனியின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான North Rhine-Westphalia-வில், ஒரு வாரத்தில் மருத்துவமனயைில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37% அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்பு விரைவில் அனைத்து மாநிலங்களையும் பாதிக்கும் என கேஸ் தெரிவித்துள்ளார்.