குழப்பமான மனநிலைமையில் ஜேர்மன் மக்கள்: தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
ஜேர்மனியில் பொதுத்தேர்தல் திகதி நெருங்கிவரும் நிலையில், ஜேர்மன் மக்கள் குழப்பத்திலிருப்பதுபோல் தெரிகிறது.
குழப்பமான மனநிலைமையில் ஜேர்மன் மக்கள்?
ஜேர்மனியின், CDU கட்சியின் தலைவரான ஃப்ரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) அடுத்து ஜேர்மன் சேன்ஸலராக தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இம்மாத துவக்கத்தில் புலம்பெயர்தலுக்கு எதிராக பிரேரணை ஒன்றை முன்வைத்தார் மெர்ஸ். அவருக்கு, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான Alternative für Deutschland (AfD) கட்சி ஆதரவளித்தது.
ஆனால், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியுடன் அவர் கைகோர்த்ததால், மக்களிடையே அவருக்கு ஆதரவு குறைந்துள்ளது.
சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில், மெர்ஸின் Christian Democrats (CDU/CSU) கட்சிக்கு, மக்கள் ஆதரவு இரண்டு புள்ளிகள் குறைந்து 27 சதவிகிதமாகிவிட்டது.
ஆக, மக்கள் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களா என்றால், அதுவும் தெரியவில்லை.
ஏனென்றால், மக்கள் ஆதரவில் இரண்டாவது இடம் பிடித்துள்ள கட்சியே, புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative für Deutschland (AfD) கட்சிதான்.
அக்கட்சிக்கு மக்கள் அளித்து வந்த 20 சதவிகித ஆதரவில் எந்த மாற்றமும் இல்லை என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஆக, புலம்பெயர்தலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தால் எதிர்க்கிறார்கள், தெருக்களில் இறங்கி பேரணி நடத்துகிறார்கள் ஜேர்மன் மக்கள்.
ஆனால், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative für Deutschland (AfD) கட்சிக்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறார்கள்.
ஆக, ஜேர்மனியில் பொதுத்தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், ஜேர்மன் மக்கள் குழப்பத்திலிருப்பதுபோல் தெரிவதால் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |