ஜேர்மனியில் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோர் கண்டுபிடிப்பு

Immigration
By Ragavan Oct 17, 2022 05:53 PM GMT
Report

புலம்பெயர்ந்தோர் குழுவில் இரண்டு குழந்தைகளும், ஆதரவற்ற இரண்டு சிறார்களும் இருந்தனர்.

பசி, தாகம் மற்றும் கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய நிலையில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்.

ஜேர்மன்-போலந்து எல்லையில் ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை கண்டுபிடித்தனர்.

ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் (Bundespolizei) மற்றும் சுங்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களைக் கண்டுபிடித்தனர். ஜேர்மன்-போலந்து எல்லைக்கு அருகில், கிழக்கு மாநிலமான Brandenburg-ல் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

ஜேர்மனியில் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோர் கண்டுபிடிப்பு | German Police Found 18 Migrants Refrigerated LorryPhoto: picture alliance

ஜேர்மனியின் உள்ளூர் ஊடங்களின்படி, குளிரூட்டப்பட்ட லொறிக்குள் அவர்கள் அனைவரும் காற்று புகாத கொள்கலனில் மூடப்பட்டிருந்தனர்.

சுங்க அதிகாரிகள் குபென் நகரில் ஒரு வழக்கமான சோதனையின் போது அவர்கள் லொறியில் கண்டுபிடித்தனர்.

அவர்களில் 5 மற்றும் 10 வயதுடைய இரண்டு குழந்தைகளும் இருந்தனர், மேலும் 14 வயதுடைய இரண்டு ஆதரவற்ற சிறார்கள் இருந்தனர்.

அவர்கள் ஈரான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று ஜேர்மன் காவல்துறை கூறியது. அவர்களில் 12 பேர் ஈரானிலிருந்தும், 4 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்தும், இருவர் ஈராக்கிலிருந்தும் வந்தவர்கள் ஆவர். அவர்களின் வயது ஐந்து முதல் 44 வரை இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியில் இருந்த கண்டெயினரில் காற்று அல்லது ஒளி இல்லை

புலம்பெயர்ந்தோர் பதுங்கியிருந்த கண்டெயினரில் சுத்தமான காற்றோ வெளிச்சமோ இல்லை என ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டவர்கள் பசி, தாகம் மற்றும் கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய நிலையில் அவதியில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர்களை Eisenhüttenstadt நகரத்தில் அருகிலுள்ள வரவேற்பு மையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், துணையில்லாத இரு இளைஞர்களை ஜேர்மனியின் இளைஞர் அதிகாரிகளான Jugendamts பொறுப்பேற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் 32 வயது ஓட்டுநர், லிதுவேனியன் நாட்டவர், விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US