ஜேர்மனியில் இருந்து வெளிநாட்டவர்களே வெளியேறுங்கள்: வைரல் வீடியோ ஏற்படுத்தியுள்ள சர்ச்சை
ஜேர்மனியில், இளைஞர்கள் சிலர் இனவெறுப்புப் பாடல் ஒன்றைப் பாடும் வீடியோ வைரலாகியுள்ளதைத் தொடர்ந்து, பொலிசார் அது தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
Dieses Video aus Sylt soll einige Tage alt sein. Die Partygäste singen gelassen „Deutschland den Deutschen, Ausländer Raus“ auf „L’amour Toujou“ von Gigi D'Agostino. Ein rechtsextremer Trend aus dem Jahr 2023. Dazu angedeuteter Hitlergruß und Hitlerbart.
— Ruben Gerczikow (@RubenGerczi) May 23, 2024
https://t.co/P3kAPAjA4Z
வைரல் வீடியோ
ஜேர்மனிக்கு சொந்தமான Sylt என்னும் தீவில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றின் வெளியே இளைஞர்கள் சிலர் பாடல் ஒன்றைப் பாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அந்த இளைஞர்கள், பிரபல பாடல் ஒன்றின் வரிகளை மாற்றி, வெளிநாட்டவர்களே வெளியேறுங்கள், ஜேர்மனி ஜேர்மானியர்களுக்கே... வெளிநாட்டவர்களே வெளியேறுங்கள் என பாடுவதை அந்த வீடியோவில் காண முடிகிறது.
Zurzeit kursiert in den Sozialen Medien ein Video von Feiernden auf #Sylt. Dieses Video ist uns bekannt und wird hinsichtlich strafrechtlich relevanter Inhalte geprüft. Wir bedanken uns für die zahlreichen Hinweise, die wir an die zuständige Stelle weitergeleitet haben. pic.twitter.com/vKGRYlMX3I
— Polizei SH (@SH_Polizei) May 24, 2024
அத்துடன், ஒருவர் ஹிட்லர் போல மீசை வைத்துக்கொண்டு, நாஸி சல்யூட் அடிக்க, யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, ஜேர்மன் பொலிசார் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |