அளவுகோலுடன் பொது இடங்களில் உலாவரும் ஜேர்மனி பொலிஸ்! ஏதற்காக? வைரலாகும் வீடியோ
ஜேர்மனியில் பொது இடங்களில் கை அளவுகோலுடன் பொலிசார் உலாவரும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஜேர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசாங்கம் புதிய கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளது.
கட்டாய முகக்கவசம், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
அதேசமயம், பொது இடங்கள், உட்புற மற்றும் வெளிப்புற உணவகங்கள் உட்பட மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் மக்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது இடங்களில் மக்களிடையே இருக்கும் இடைவெளியை அளவுகோல் மூலம் அளவீட பொலிசார் தொடங்கியுள்ளனர்.
இதற்காக ஜேர்மனியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொது இடங்களில் கையில் அளவுகோலுடன் பொலிசார் உலாவருகின்றனர்.
இணையத்தில் வெளியான வீடியோவில், பொது இடம் ஒன்றில் பொலிசார் கையில் அளவுகோலுடன் மக்கள் இடையில் இருக்கும் இடைவெளியை அளவீட்டு, அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா என்பதை உறுதி செய்கின்றனர்.