ஜேர்மனியில் 400க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
German police respond to multiple school bomb threats: ஜேர்மனியில் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் 400க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
400க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இன்று திங்கட்கிழமை காலை, ஜேர்மனியின் Baden Württemberg மாகாணத்தில், 400க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக பொலிசாருக்கு தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

அதேபோல, Saxony-Anhalt மாகாணத்திலும், 250க்கு மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.
முதலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது Thuringia மாகாண பொலிசார்தான்.
நெதர்லாந்து நாட்டிலும் இதேபோல் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
பொலிசார் பள்ளிகளுக்குச் சென்று மேற்கொண்ட ஆய்வுகளில், இந்த மிரட்டல்கள் போலியானவை என தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

மின்னஞ்சல்கள் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிரட்டல் விடுத்தது யார் என தெரியவில்லை என்றும், அது குறித்து விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டென்மார்க் நாட்டிலும் இதேபோல வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக, ஐரோப்பாவிலுள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.