2024-ஆம் ஆண்டில் ஜேர்மன் பொலிசாரால் 22 பேர் சுட்டுக்கொலை
ஜேர்மனியில் 2024-ஆம் ஆண்டில் காவல்துறையால் 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இது 1990-ஆம் ஆண்டு ஜேர்மனியின் மறு ஒன்றிணைவு காலத்திற்குப் பின் பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
DPA செய்தி அமைப்பு வெளியிட்ட கணக்குகளின்படி, இதற்கு முன் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை 1995 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் 19-ஆக இருந்தன.
கொல்லப்பட்டவட்டவர்கள் பல சம்பவங்களில் மனநிலை கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலானவர்கள் கத்திகள் போன்ற ஆயுதங்களுடன் இருந்தனர், இதனால் காவல்துறை துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.
முந்தைய ஆண்டுகளின் நிலை
2023-இல் 10 பேர், 2022-இல் 11 பேர், மற்றும் 2021-இல் 8 பேர் காவல்துறை துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தனர்.
2024-ஆம் ஆண்டின் உயர் எண்ணிக்கை, ஜேர்மனியில் காவல்துறை செயல்பாடுகள் மற்றும் மனநல பிரச்சனைகளின் நிலையை பிரதிபலிக்கின்றது.
இந்த எண்ணிக்கைகள் ஜேர்மனிய காவல்துறை செயல்பாடுகள் குறித்து புதிய விவாதங்களுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு உள்ளதென கணிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |