உக்ரேனியர்களுக்காக விமானங்களை அனுப்ப தயாராகும் ஜேர்மன் ஆயுதப்படை!
உக்ரேனியர்களை நாட்டிற்கு அழைத்து வர ஜேர்மன் ஆயுதப்படை அதன் விமானங்களை அனுப்ப தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 47வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு தரப்பிலும் பயங்கர இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காயமடைந்த உக்ரேனியர்களை வெளியேற்ற ஜேர்மன் ஆயுதப்படை, அதன் விமானங்களை அனுப்ப தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
முன்னதாக இன்று, Cologne-Wahn ராணுவ விமானத்தளத்திலிருந்து, போலந்தின் தென்கிழக்கில் உள்ள Rzeszow-க்கு ஜேர்மன் ஆயுதப்படை A310 MedEvac விமானத்தை அனுப்பியுள்ளது.
புடினுடனான பேச்சுவார்த்தை கடினமாக இருந்தது! வெளிப்படையாக கூறிய ஆஸ்திரிய அதிபர்
போலந்தின் Rzeszow நகரம் உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் உள்ள காயமடைந்த பொதுமக்கள் விமானம் மூலம் ஜேர்மனிக்கு அழைத்து வரப்படுவார்கள் என ஜேர்மன் ஆயுதப்படையின் செய்தித்தொர்பாளர் தெரிவித்துள்ளார்.