கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் இஸ்ரேல் பிரதமரை ஜேர்மனிக்கு வரவேற்றுள்ள ஜேர்மன் தலைவர்
ஜேர்மன் சேன்ஸலராக பதவியேற்க இருக்கும் பிரெட்ரிக் மெர்ஸ், ஜேர்மனிக்கு வருமாறு இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமரை ஜேர்மனிக்கு வரவேற்றுள்ள மெர்ஸ்
ஜேர்மனியின் அடுத்த சேன்ஸலராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படும் பிரெட்ரிக் மெர்ஸுக்கு பல நாடுகளின் தலைவர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகிறார்கள்.
அவ்வகையில், இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு, தன்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக் கூறியதுடன், இஸ்ரேலுக்கு வருமாறு தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாக மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தானும் ஜேர்மனிக்கு வருமாறு நெதன்யாகுவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், போர்க்குற்றங்களுக்காக நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
ஆகவே, அவர் ஜேர்மனிக்கு வருகைபுரிவாரானால், அவர் ஜேர்மனியில் கைது செய்யப்படலாம்.
ஆனால், அவர் ஜேர்மனிக்கு வந்துவிட்டு, கைது செய்யப்படாமல் திரும்பிச் செல்வதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க இருப்பதாக நெதன்யாகுவுக்கு தான் உறுதியளித்துள்ளதாக மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் பிரதமரான ஒருவர், ஜேர்மன் குடியரசுக்கு வருகைதர முடியாது என்பது அபத்தமான விடயம் என நான் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார் மெர்ஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |