33,000-ஐத் தாண்டிய மரண எண்ணிக்கை! ஜேர்மன்-ஈரானிய பேராசிரியர் அதிர்ச்சி தகவல்
ஈரானில் ஆட்சியாளர்கள் நடத்திய கொடூரமான ஒடுக்குறையில் 33,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
18,000 பேர் வரை
கடந்த டிசம்பர் 28ஆம் திகதி அன்று ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் 16,500 முதல் 18,000 பேர் வரை கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
AP/AFP
அமெரிக்கா பிராந்தியத்தில் தனது இராணுவ இருப்பை அதிகரித்து வரும் நிலையில், எந்தவொரு தாக்குதலையும் 'ஒரு முழு அளவிலான போராக' கருதுவோம் என்று ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி எச்சரித்தார்.
இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீதான கொடூர ஒடுக்குமுறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,000-ஐத் தாண்டியுள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
Reuters
ஜேர்மன்-ஈரானிய பேராசிரியர்
ஜேர்மன்-ஈரானிய பேராசிரியர் அமீர்-மொபாரெஸ் பராஸ்டா (Amir Mobarez Parasta) நடத்திய ஆராய்ச்சியின்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையுடன் 97,645 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 30 சதவீதம் பேர் கண் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர், போராட்டக்காரர்களை ஆட்சியாளர்கள் தூக்கிலிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையில், தலைநகர் தெஹ்ரானில் மட்டும் 468 பேர் தூக்கிடப்பட்டுள்ளனர் மற்றும் நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்டோர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என மருத்துவமனை சேர்க்கை தரவுகள் தெரிவிக்கின்றன.

டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஈரானிய ஆட்சி போராட்டக்காரர்களைத் தூக்கிலிடத் தொடங்கினால் அமெரிக்கா மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |