ஜேர்மன் பள்ளியில் ஆயுதமேந்திய மர்ம நபர் தாக்குதல்! வெளியான புகைப்படம்
ஜேர்மனியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆயுதமேந்திய மர்ம நபர் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழனன்று வடக்கு நகரமான Bremerhaven-ல் உள்ள ஜேர்மன் பள்ளி ஒன்றிலே இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவர் காயமடைந்ததாகவும், மாணவர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்திற்கு பிறகு ஆயுதமேந்திய நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் உள்ளார், காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களுடன் வகுப்பறையில் இருக்கின்றனர். சம்பவயிடத்தில் பொலிஸ் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். பொலிஸ் நடவடிக்கை தொடர்கிறது என காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதில் காயமடைந்த நபர் பெண் எனவும், சம்பவத்துடன் தொடர்புடைய 2வது சந்தேக நபர் தப்பியோடியதாக ஜேர்மன் செய்தித்தாளான Bild தெரிவித்துள்ளது. எனினும், பொலிசில் தரப்பில் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
அதேசமயம், கைது செய்யப்பட்ட நபர் குறுக்கு வில் வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரித்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுடும் சத்தம் கேட்ட பள்ளி மாணவி ஒருவர் பொலிஸை தொடர்பு கொண்டதாகவும், மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்குள் சென்ற பதுங்கியதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.