கடலுக்கடியில் கிடக்கும் வெடிகுண்டுகளால் புதிய பிரச்சினை
Scientists warn that toxic chemicals from military munitions are contaminating German marine life: ஜேர்மன் கடல் பகுதியில் கிடக்கும் துருப்பிடித்த வெடிகுண்டுகள் கடலை மாசுபடுத்துவதாக எச்சரிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின்போது வீசப்பட்ட குண்டுகள், 1945ஆம் ஆண்டுக்குப் பிறகு கடலில் வீசப்பட்ட குண்டுகள் என, ஜேர்மனியை ஒட்டியுள்ள வட கடல் மற்றும் பால்டிக் கடல்களுக்கடியில் கிடக்கும் வெடிகுண்டுகள் துருப்பிடிக்கத் துவங்கியுள்ளன.
கடலுக்கடியில் கிடக்கும் வெடிகுண்டுகளால் புதிய பிரச்சினை
சுமார் 1.6 மில்லியன் மெட்ரிக் டன் வெடிகுண்டுகள் கடலுக்கடியில் கிடக்கும் நிலையில், அவற்றால் புதியதொரு பிரச்சினை உருவாகியுள்ளது.

ஆம், அந்த வெடிகுண்டுகள் துருப்பிடிக்கத் துவங்கியுள்ளதால், அவற்றிலிருந்து வெளியேறும் ரசாயனங்களால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து என்கிறார் Kiel பல்கலை நச்சியல் துறை நிபுணரான Edmund Maser என்பவர்.
இந்த ரசாயனங்கள், நச்சுத்தன்மை கொண்டவை, புற்றுநோயை உருவாக்கக்கூடியவை, அதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்து என்கிறார் அவர்.
விடயம் என்னவென்றால், வெடிகுண்டுகளில் வெடிப்பொருளாக பயன்படுத்தப்படும் TNT என்னும் ரசாயனம், மீன்கள் உடலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

என்றாலும், இதுவரை அந்த ரசாயனம், மீன்கள் உடலில் சிறிய அளவிலேயே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மீன்களின் ஆரோக்கியத்தை வெளிப்படையாக பாதிக்கவில்லை.
ஆனால், ஆராய்ச்சிகளில், மீன்களின் கல்லீரலில் கட்டிகள் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
விடயம் என்னவென்றால், இந்த ரசாயனங்கள் மீன்களிலும் சிப்பிகளிலும் மட்டுமல்ல, திமிங்கலங்கள் உடலிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த ரசாயனங்கள், கடல் உணவுச் சங்கிலியின் உச்சத்தில் உள்ள விலங்குகள் வரை சென்றடைந்துள்ளது என்பதுதான் சிந்திக்கவைத்துள்ள விடயம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |