27 ஆண்டுகளில் முதன்முறையாக பிரித்தானியா வரும் ஜேர்மன் ஜனாதிபதி
27 ஆண்டுகளில் முதன்முறையாக பிரித்தானியா வர இருக்கிறார், ஜேர்மனி நாட்டின் ஜனாதிபதி ஒருவர்.
27 ஆண்டுகளில் முதன்முறையாக...
1998ஆம் ஆண்டு, ஜேர்மனியின் ஜனாதிபதியாக இருந்த Roman Herzog, பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணமாக வருகை புரிந்தார்.
அதற்குப் பிறகு, அதாவது, 27 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் ஜேர்மன் ஜனாதிபதி ஒருவர் பிரித்தானியா வர இருக்கிறார்.
டிசம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை, ஜேர்மனியின் ஜனாதிபதியான Frank-Walter Steinmeier பிரித்தானியாவில் செலவிட இருக்கிறார்.
விண்ட்சர் மாளிகையில் மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் ஜேர்மன் ஜனாதிபதிக்கு விருந்தளிக்க இருக்கிறார்கள்.
சார்லஸ் மன்னரானதும் அவரும் ராணி கமீலாவும் முதல் அரசு முறைப்பயணமாக ஜேர்மனிக்குதான் சென்றார்கள். 2023ஆம் ஆண்டு, மார்ச் மாதம் தங்களை வரவேற்று உபசரித்த ஜேர்மனிக்கு, பதில் உபசரிப்பை வழங்கத் தயாராகிவருகிறார்கள் மன்னரும் ராணியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |