ஜேர்மனியில் ஏழு பேருடைய உணவில் விஷம் கலந்ததாக மாணவி ஒருவர் கைது
ஜேர்மன் பல்கலை ஒன்றில் பயிலும் மாணவி ஒருவர்,அந்த பல்கலை ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என ஏழு பேருடைய உணவில் விஷம் வைத்ததாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியிலுள்ள Mainz நகரைச் சேர்ந்த அந்த 32 வயது மாணவி, Darmstadtஇலுள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று, ஏழு பேர் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய உணவிலும் பானங்களிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் நச்சுத்தன்மை கொண்ட பொருள் ஒன்றைக் கலந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் 30 வயது மாணவர் ஒருவர் உயிருக்குப் போராடும் நிலைக்குச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் 2021ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் நடந்துள்ளது.
இந்நிலையில், மன நலப் பிரச்சினைகள் கொண்ட அந்தப் பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், அந்தப் பெண் தனது மன நலப் பிரச்சினை காரணமாகவே நச்சுப்பொருளைக் கலந்திருக்கலாம் என்றும், அதனால், அவரது செயல்களுக்கு அவர் பொறுப்பாக இருக்க வாய்ப்பில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்டுள்ள அந்தப் பெண், மன நலக் காப்பகம் ஒன்றில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.