புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்: பல்பொருள் அங்காடியின் பதிலடி
A German supermarket is getting attention online after responding to a customer who objected to its diverse workforce: ஜேர்மன் பல்பொருள் அங்காடி ஒன்றில் கருப்பினப் பின்னணி கொண்ட ஒருவர் வேலை செய்வதற்கு வாடிக்கையாளர்களில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு சுடச்சுட பதிலளித்துள்ளது பல்பொருள் அங்காடி. ஜேர்மன் பல்பொருள் அங்காடி ஒன்றில் கருப்பினப் பின்னணி கொண்ட ஒருவர் வேலை செய்துகொண்டிருந்திருக்கிறார்.
எதிர்ப்பு தெரிவித்த நபர்
பல்பொருள் அங்காடி வாடிக்கையாளர்களில் ஒருவருக்கு, அந்த நபர் அங்கு வேலை செய்வது பிடிக்கவில்லை.

ஆகவே, சமூக ஊடகம் ஒன்றில், அவரது புகைப்படத்தையும் வெளியிட்டு, உங்கள் பல்பொருள் அங்காடியில் புலம்பெயர்தல் பின்னணி இல்லாத ஜேர்மானியர்களை வேலைக்கு வைத்துக்கொண்டால் நல்லது.
இல்லையென்றால், இனி என் குடும்பம் உங்கள் கடையில் பொருட்கள் வாங்காது, என்று குறிப்பிட்டுள்ளார் அந்த வாடிக்கையாளர்.
பொதுவாக இதுபோன்ற விமர்சனங்கள் வந்தால், வாடிக்கையாளரை தவற விட்டு விடக்கூடாதே என்பதற்காக, பல்பொருள் அங்காடிகள் நடுநிலையாக ஏதாவது பதிலளிப்பது உண்டு.
ஆனால், அந்த பல்பொருள் அங்காடியோ, அந்த வாடிக்கையாளருக்கு சுடச்சுட பதிலளித்துள்ளது.
நாங்கள் எப்படி அப்படிச் செய்யமுடியும், நாங்கள் எங்கள் கடைகளில் ஆட்களை வேலைக்கு எடுக்கும்போது, அவர்கள் என்ன படித்திருக்கிறார்கள், வாடிக்கையாளர்களிடம் அன்புடன் பழகுவார்களா, நம்பிக்கைக்குரியவர்களா, வேலையில் உண்மையாக இருப்பார்களா என்றுதான் பார்க்கிறோம்.
மாறாக, அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று பார்த்து நாங்கள் யாரையும் வேலைக்கு எடுப்பதில்லை என பதிலளித்துள்ளது அந்த பல்பொருள் அங்காடி.
அந்த இடுகை ஏராளம் லைக்குகளை பெற்றுள்ளதுடன், பலரும் அந்த பல்பொருள் அங்காடியைப் பாராட்டிவருகிறார்கள்.
இந்நிலையில், இந்த விடயம் குறித்து ஒருவர் அந்த பல்பொருள் அங்காடியின் செய்தித்தொடராளரிடம் கேள்வி எழுப்ப, ஏற்கனவே ஜேர்மனியில் பணியாளர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது, அப்படியிருக்கும்போது, ஒருவர் எந்த நாட்டவர் என்று பார்த்து அவரை நிராகரிப்பது நிதர்சனத்தில் பொருத்தமற்ற விடயமாகும் என்று கூறியுள்ளார்.