உள்ளூர் அதிகாரிகளால் சுவிஸ் குடியுரிமை மறுக்கப்பட்ட பெண்: நீதிமன்றத்தின் தீர்ப்பு

Switzerland Citizenship
By Balamanuvelan Nov 09, 2026 08:36 AM GMT
Report

Teacher wins court battle for Swiss citizenship after failing to answer question: உள்ளூர் அதிகாரிகளால் சுவிஸ் குடியுரிமை மறுக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஆதரவாக, நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

உள்ளூர் அதிகாரிகளால் சுவிஸ் குடியுரிமை மறுக்கப்பட்ட பெண்ணொருவருக்கு ஆதரவாக, நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

குடியுரிமை மறுக்கப்பட்ட பெண்

2010ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்த, 49 வயதுடைய, ஜேர்மன் நாட்டவரான ஆசிரியை ஒருவரும், அவரது குடும்பத்தினரும் 2024ஆம் ஆண்டு சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார்கள். 

உள்ளூர் அதிகாரிகளால் சுவிஸ் குடியுரிமை மறுக்கப்பட்ட பெண்: நீதிமன்றத்தின் தீர்ப்பு | German Teacher Win Court Battle Swiss Citizenship

2025ஆம் ஆண்டு, அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் சுவிஸ் குடியுரிமை கிடைக்க, அந்த ஆசிரியையின் குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

காரணம் என்ன?

உள்ளூர் பாதிரியார் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம் ஒன்று தொடர்பான ஒரு கேள்விக்கு விடை தெரியாததாலேயே அந்த ஆசிரியையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், சாலை ஒன்று மாற்றியமைக்கப்பட்டது தெரியாமல் பயணித்த ஒரு பாதிரியாரின் கார், சேற்றில் சிக்கிக்கொண்டதாம்.

பின்னர் அவர் உதவி கோரி அழைக்க, ட்ராக்டர் ஒன்றின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம், ’Pfarrersgärtli’ (the pastor’s little garden) என அழைக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பான கேள்விக்கு அந்த ஆசிரியைக்கு பதில் தெரியாததாலேயே, உள்ளூர் கமிட்டி ஒன்று அவருக்கு குடியுரிமை அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு

உள்ளூர் கமிட்டியின் முடிவை எதிர்த்து அந்தப் பெண் சுவிஸ் ஃபெடரல் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த ஆசிரியைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. 

உள்ளூர் அதிகாரிகளால் சுவிஸ் குடியுரிமை மறுக்கப்பட்ட பெண்: நீதிமன்றத்தின் தீர்ப்பு | German Teacher Win Court Battle Swiss Citizenship

அதாவது, அவர் ஏற்கனவே சுவிஸ் மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்துவருகிறார் என்றும், அந்த விடயத்தை கருத்தில் கொள்ளும்போது, அவருக்கு உள்ளூர் கதை ஒன்று தெரியாதது பெரிய விடயமல்ல என்றும், ஒரு சிறிய விடயத்துக்காக அவரது விண்ணப்பத்தை நிராகரிப்பது அதிகார துஷ்பிரயோகம் என்றும் நீதிமன்றம் கூறிவிட்டது.

விடயம் என்னவென்றால், அந்த பாதிரியாரின் கதை, அந்தப் பகுதியில் வாழும் சுவிஸ் மக்கள் பலருக்கே தெரியாதாம்! 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US