உயிரை மாய்த்துக்கொண்ட அமெரிக்க சிறுமி: ஜேர்மானியர் கைது
German teen arrested in connection with US girl's death: அமெரிக்கச் சிறுமி ஒருத்தி தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்ட வழக்கில், ஜேர்மன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க சிறுமி ஒருத்தி தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ளக் காரணமாக இருந்த ஜேர்மானிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரை மாய்த்துக்கொண்ட அமெரிக்க சிறுமி
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருத்தி, இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 2ஆம் திகதி, தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார்.

அமெரிக்க அதிகாரிகளின் விசாரணையில், ஜேர்மன் இளைஞர் ஒருவர் சமூக ஊடகம் ஒன்றின் வாயிலாக அந்தச் சிறுமியுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்தது.
மேலதிக விசாரணையில், அந்தச் சிறுமி தன்னைத்தான் காயப்படுத்தி, தன் உயிரை மாய்த்துக்கொள்ள அந்த இளைஞர் காரணமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.
அத்துடன், அந்த சிறுமி உயிரிழந்தபின்பும், அது தொடர்பான வீடியோக்களைப் பெற்று அவளது நட்பு வட்டாரத்தைச் சேர்ந்தவர்களை அந்த இளைஞர் மிரட்டியுள்ளார்.
அமெரிக்க அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் ஜேர்மன் அதிகாரிகளுக்கு தகவலளிக்க, 18 வயதுடைய அந்த இளைஞரை ஜேர்மன் அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளார்கள்.