வெளிநாடு சுற்றுலா சென்ற ஜேர்மன் பெண் சந்தித்த அதிர்ச்சி
German tourist bitten, pulled into water by monitor lizard in Thailand: தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த ஜேர்மன் பெண்ணொருவர் உடும்பு ஒன்றால் தாக்கப்பட்டுள்ளார்.
தனது 60 வயதுகளிலிருக்கும் ஜேர்மன் நாட்டவரான பெண்ணொருவர் தாய்லாந்திலுள்ள எரவான் தேசிய பூங்காவிலுள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
ஜேர்மன் பெண் சந்தித்த அதிர்ச்சி
தண்ணீரில் கால்களை நனைத்தபடி அந்தப் பெண் அமர்ந்திருந்த நிலையில், திடீரென உடும்பு ஒன்று தண்ணீருக்கடியிலிருந்து வந்து அவரைத் தாக்கியுள்ளது.

அவரது காலை கவ்விப்பிடித்த உடும்பு, அவரை தண்ணீருக்கடியில் இழுத்துச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதை கவனித்த பூங்கா ஊழியர்கள் அவரை மீட்டு அவருக்கு முதலுதவி செய்துள்ளனர்.
ஆனால், அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் சுற்றுலா செல்லும் இடத்தில் இப்படி அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நடந்ததால், அந்த உடும்பை பிடித்துள்ளார்கள் பூங்கா அலுவலர்கள்.
பின் அந்த உடும்பு தொலைவிலுள்ள வனப்பகுதி ஒன்றில் விடப்பட்டுள்ளது.