சட்டப்படி அமெரிக்கா சென்ற ஜேர்மன் இளம்பெண் கைது: சமீபத்திய தகவல்
சட்டப்படி அமெரிக்கா சென்ற ஜேர்மானிய இளம்பெண் ஒருவர் புலம்பெயர்தல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
அமெரிக்கா சென்ற ஜேர்மன் இளம்பெண் கைது
ஜெசிகா (Jessica Brösche, 29) என்னும் ஜேர்மன் நாட்டு இளம்பெண், ஜனவரி மாதம் 25ஆம் திகதி அமெரிக்கா சென்றார்.
டாட்டூ ஆர்ட்டிஸ்ட்டான ஜெசிகா, கலை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றிற்கான ஒரு மாதம் தங்குவதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தார்.
ஆனால், அவர் சட்ட விரோதமாக அமெரிக்காவில் வேலை செய்யும் நோக்கில் வந்துள்ளதாகக் கூறி, அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையிலும் ஜெசிகாவைக் கைது செய்தார்கள் அமெரிக்க புலம்பெயர்தல் அதிகாரிகள்.
அவர் ஏற்கனவே ஜேர்மனிக்கு திரும்பிச் செல்வதற்கான டிக்கெட் எடுத்துவைத்திருந்த நிலையிலும், ஜெசிகாவை தடுப்புக் காவலில் அடைத்துள்ளார்கள் அதிகாரிகள்.
சமீபத்திய தகவல்
இந்நிலையில், ஜேர்மன் தூதரக மற்றும் வெளியுறவு அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கைகள் எடுத்துவந்த நிலையில், ஜெசிகா நேற்று ஜேர்மனிக்கு நாடுகடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன் மகள் நாடு திரும்பிக்கொண்டிருப்பதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த ஜெசிகாவின் தாயாகிய பிர்ஜிட், என் மகளை என் கைகளால் தழுவிக்கொண்டால் ஒழிய அவள் விடுவிக்கப்பட்ட செய்தியை நம்பமாட்டேன் என்று கூறியுள்ளார்.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துகிறேன் பேர்வழி என அமெரிக்க ஜனாதிபதி எடுத்துவரும் நடவடிக்கைகளால், முறைப்படி அமெரிக்காவுக்குள் நுழைவோருக்குக் கூட பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் எனலாம்.
ஜெசிகா, தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு நாட்கள் உட்பட, ஆறு வாரங்கள் அமெரிக்காவில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |