லண்டனில் காணாமல் போன ஆங்கிலம் தெரியாத ஜேர்மன் பெண்: தேடுதல் வேட்டை தீவிரம்
ஜேர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் லண்டனில் காணாமல் போனதை அடுத்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
லண்டனில் காணாமல் போன ஜேர்மனியர்
லண்டனில் ஜேர்மனியை சேர்ந்த 69 வயது பிர்கிட் (birgit) என்ற சுற்றுலாப் பயணி காணாமல் போயிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன பிர்கிட்டிற்கு டிமென்ஷியா பாதிப்பு இருப்பதாகவும், அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதாலும் அவரை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (3ஆம் திகதி) டவர் ஹில் பகுதியில் உள்ள மைனோரிஸ் பப்பில் கடைசியாக பார்க்கப்பட்டுள்ளார்.

கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகளில், அவர் அன்று மாலை 6.25 மணியளவில் மிடில்செக்ஸ் தெருவில் உள்ள தி அஸ்ட்ரோனமர் பப் அருகே பிஷப்ஸ் கேட் பகுதிக்கு அருகே நடந்து செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட அடையாளம்
பிர்கிட் தொடர்பான தேடுதல் வேட்டைக்கு உதவும் வகையில், காணாமல் போன அன்று எடுக்கப்பட்ட பிர்கிட் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி வெள்ளை நிறப் பெண், பொன்னிற முடி, பின்னர் நீல நிற ஜீன்ஸ் மற்றும் சிவப்பு வெள்ளை மற்றும் நீல நிற கோடுகள் கொண்ட சட்டையை பிர்கிட் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |