குறைந்துவரும் நதிநீர் மட்டம்: ஜேர்மன் அமைச்சர்கள் சந்திப்பு
ரைன் நதியின் நீர் மட்டம் குறைந்துவருவதால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் அமைச்சர்கள் விவாதிக்க உள்ளார்கள்.
ரைன் நதியில் நீர் மட்டம் குறைந்துவருவதால், ஜேர்மனியில் சரக்குக் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறைந்துவரும் நதிநீர் மட்டம்
சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் பிறக்கும் ரைன் நதி, Liechtenstein, ஆஸ்திரியா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து வழியாக வட கடலைச் சென்றடைகிறது.
ஆக, ஐரோப்பாவில், நீர் வழிப் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது ரைன் நதி.

விடயம் என்னவென்றால், இந்த நாடுகள் சரக்குப் போக்குவரத்துக்கு ரைன் நதியை நம்பியுள்ளன.
ஆனால், வெயில் மற்றும் மழையின்மை காரணமாக ரைன் நதியில் நீர் மட்டம் குறைந்துவருகிறது.
இதனால், ஏற்கனவே ரைன் நதியில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் சுவிட்சர்லாந்தில் சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜேர்மனியிலும் சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பொருட்கள் தட்டுப்பாட்டை சமாளிப்பது தொடர்பில் விவாதிப்பதற்காக, ஜேர்மன் அமைச்சர்கள் கூட்டம் ஒன்றில் பங்கேற்க உள்ளார்கள்.
அதன்படி, இன்று, ஜேர்மன் ஃபெடரல் போக்குவரத்துத்துறை அமைச்சரும், ஜேர்மன் மாகாண போக்குவரத்துத்துறை அமைச்சர்களும், வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் கூட்டம் ஒன்றில் பங்கேற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விவாதிக்க உள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |