நாடொன்று தொடர்பில் ஜேர்மனி தெரிவித்துள்ள பயண ஆலோசனை
கியூபா நாட்டுக்கு பயணிப்பது தொடர்பில் ஜேர்மனி பயண ஆலோசனை ஒன்றை தெரிவித்துள்ளது.
ஜேர்மனி தெரிவித்துள்ள பயண ஆலோசனை
கியூபாவுக்குச் செல்லவேண்டாம் என ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் தன் நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது.
ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில், கியூபாவில் தீவிர ஆற்றல் நெருக்கடி நிலவுவதாகவும், அதனால், மருத்துவம் முதலான வாழ்வின் அனைத்து முக்கிய விடயங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அத்தியாவசிய தேவை ஏற்பட்டாலன்றி, கியூபாவுக்குச் செல்லவேண்டாம் என தன் நாட்டு மக்களுக்கு பயண ஆலோசனை தெரிவித்திருந்தது ஜேர்மனி.
இந்நிலையில், தற்போது ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில், கியூபாவில் தீவிர ஆற்றல் நெருக்கடி நிலவுவதாகவும், அதனால், மருத்துவம் முதலான முக்கிய விடயங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமானம் மற்றும் ஹொட்டல் வசதியும் அங்கு குறைவாகவே உள்ளதாகவும், கடைசி நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும், அதனால் ஜேர்மன் மக்கள் கியூபாவுக்குச் செல்லவேண்டாம் என்றும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |