கர்ப்பிணிகள் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஜேர்மனி எடுத்துள்ள முடிவு
ஜேர்மனியின் தடுப்பூசி ஆலோசனை அமைப்பு கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் தடுப்பூசி ஆலோசனைக்குழு (STIKO), ஜேர்மன் அரசுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு தனிப்பட்ட அமைப்பாகும். அந்த அமைப்பு, கருவுற்று 13 முதல் 28 வாரங்கள் அல்லது 4,5,6ஆவது மாதத்திலிருக்கும் (second trimester) கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கலாம் என அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
அத்துடன், தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் இரண்டு டோஸ் mRNA வகை தடுப்பூசியும் (பைசர் மற்றும் மொடெர்னா) பெற்றுக்கொள்ளலாம் என்றும் STIKO ஆலோசனை வழங்கியுள்ளதாக Robert Koch நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.
Lauter gute Nachrichten zur COVID19 Impfung.
— Leif Erik Sander (@Sander_Lab) September 10, 2021
Sehr gute Daten von RKI & PHE, STIKO-Empfehlung für Schwangere & Stillende, Ankündigung für Kinder <12 J.
Dazu sehr große Studien zur hohen *Sicherheit* der Impfung.
Trotzdem bleibt Impfquote zu niedrig
Da müssen wir jetzt mehr tun pic.twitter.com/RUOr7XkMvW
இந்த பரிந்துரை பெடரல் மாகாணங்களாலும் நிபுணர்களாலும் மீளாய்வு செய்யப்படவேண்டியுள்ளது, ஆகவே இது இறுதியான பரிந்துரை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், வரும் வாரங்களில் இதுவே இறுதியான முடிவாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை எந்த அமைப்பும் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் எந்த இறுதியான, உறுதியான முடிவும் எடுக்காமலே இருந்துவந்தன.
ஆனால், சில கர்ப்பிணிகள் தாங்கள் கருவுற்றிருப்பது தெரியாமலே தற்செயலாக தடுப்பூசி பெற்றுக்கொண்டிருகிறார்கள். சில கர்ப்பிணிகளோ தங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து தடுப்பூசி பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பாதகமான எந்த விளைவுகளும் ஏற்படவில்லை.
இதுவே, தற்போது கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசி பெறலாம் என்ற முடிவு எடுக்கப்பட காரணமாக அமைந்துள்ளது.
இதற்கிடையில், இந்த செய்தியை பெடரல் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn முதல், வைராலஜி துறை நிபுணர்கள் வரை பலரும் வரவேற்றுள்ளனர்.
உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள், தடுப்பூசி பெற்றுக்கொள்ளுங்கள், அப்படிச் செய்வதால் உங்களையும் உங்கள் குழந்தையையும் நீங்கள் பாதுகாக்கிறீர்கள் என்று கூறியுள்ளார் Jens Spahn.